உம்மு ஹராம் (ரலி) அவர்கள் விஷயத்தில் தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் சொன்னது தவறா? நஸ்ரி என்பவரின் காட்டுப் புலம்பலுக்கு பதில்!

23

நபிகள் நாயம் (ஸல்) அவர்கள், நபித்தோழியர் உம்மு ஹராம் (ரலி) என்ற அண்ணியப் பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவதாகவும், நபிகள் நாயகம் அவர்களுக்கு உம்மு ஹராம் (ரலி) அவர்கள் பேண் பார்த்து விடுவார்கள் என்றும் ஒரு செய்தி புகாரி முஸ்லிம் உள்ளிட்ட பல கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த செய்தி தொடர்பாக தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் சகோ. ரஸ்மின் MISc அவர்கள் பேசிய ஒரு வீடியோ க்லிப்பை கடந்த 30.07.2017 அன்று கொழும்பில் நடைபெற்ற ஒரு விவாதத்தில் ஸலபிகள் சார்பில் விவாதத்தித்த நஸ்ரி என்பவர் போட்டுக் காட்டி, புகாரியில் நீங்கள் சொல்வதை எடுத்துக் காட்டுங்கள் என்று சொல்லி புகாரி கிதாபை தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்களிடம் கொடுத்தார்.

தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்கள் உடனடியாக குறித்த விவாதத்திலேயே அந்த செய்தியை புகாரியில் இருந்து எடுத்துக் காட்டி விட்டார்கள். விவாதத்தில் மூக்குடைபட்டு கேவலப்பட்ட நஸ்ரி ஸலபி என்பவர் தனது பறக்கும் மானத்தை வாளியிலாவது அள்ளி வைத்துக் கொள்வதற்காக தற்போது ஒரு ஆக்கத்தை எழுதி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் புகாரியில் இடம் பெறும் செய்தியில் அண்ணியப் பெண் என்ற வார்த்தையை காட்ட முடியுமா? தவ்ஹீத் ஜமாஅத் தலைவருக்கு சவால் என்று குறிப்பிட்டுள்ளார்.

முதல் விஷயம்; குறித்த வீடியோவில் எந்த இடத்திலும் அண்ணியப் பெண் என்ற வார்த்தை ஹதீஸில் இருப்பதாக தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் சொல்ல வில்லை. மாறாக குறித்த சம்பவத்தின் கருத்து அதுதான் என்பதே வீடியோவின் சாராம்சம்.

திருமணம் முடிக்க அனுமதிக்கப்பட்ட எந்தப் பெண்ணை தொட்டாலும், பேண் பார்தாலும், அவர்களின் மடியில் தலை வைத்து தூங்கினாலும் தவறு தான். அது ஹராம் தான்.

நஸ்ரி ஸலபி என்வர் அவர் மனைவியின் அல்லது தாயின் மடியில் தூங்கினால் யாரும் குறை சொல்ல மாட்டார்கள்.

அதை விடுத்து, பக்கத்து வீட்டு பெண்ணின் மடியில் தூங்கினால் தான் பிரச்சினை.

நஸ்ரி ஸலபி அவர்களே! பக்கத்து வீட்டுப் பெண் அண்ணியப் பெண் தானே அவள் மடியில் நீங்கள் படுத்துத் தூங்கலாமா? என்று ஒருவர் கேள்வி கேட்டால், பக்கத்து வீட்டுப் பெண் அண்ணிப் பெண் என்று எழுத்தில் காட்ட முடியுமா? என்று நஸ்ரி கேட்டால் அவரை அறிவாளி என்று யாராவது சொல்வார்களா? அல்லது வடிகட்டிய முட்டால் என்று சொல்வார்களா?

உனக்கு அனுமதியில்லாத எந்தப் பெண்ணையும் தொடக் கூடாது என்பது பொதுவான மார்க்க விதியாக இருக்கும் போது, ஹதீஸில் வார்த்தை உண்டா? என்று கேள்வி கேட்ப்பது எந்த வகை அறிவாளித்தனம்?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களின் வீட்டுக்கு சென்றார்கள், உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபியவர்களுக்கு பேன் பார்த்து விட்டார்கள் என்றெல்லாம் புகாரியில் இடம் பெரும் செய்தி நபியவர்களின் கண்ணியத்தையும், ஒழுக்கத்தையும் சீர்குழைக்கும் செய்தியாகும்.

ஒழுக்கத்தின் முன்மாதிரி நபிகள் நாயகம் அவர்களை ஒழுக்கம் இல்லாதவர்களாக சித்தரிக்க முயலும் குறித்த செய்தி நபியவர்களின் காலத்தில் நடைபெறவில்லை. அது புனித குர்ஆன் நபியவர்களை பற்றி சொல்லும் செய்திகளுக்கு மாற்றமானது என்று தவ்ஹீத் ஜமாஅத் பிரச்சாரம் செய்து வருகிறது.
குறித்த செய்தியை உண்மையானது என்று நிரூபிக்க துப்பில்லாத ஸலபிக் கும்பல் மேற்கண்டவாறு புலம்பி திரிகிறது.

உண்மையில் நஸ்ரி மட்டுமல்ல, முழு ஸலபிக் கும்பலுக்கும் முடியுமென்றால் உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபியவர்களின் பால் குடி அண்ணை அல்லது திருமணம் முடிக்க தடுக்கப்பட்ட உறவு, அண்ணியப் பெண் அல்ல என்னதை ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா? அதற்கு அறிவிருக்கிறதா? மறுமை நாள் வரை இவர்களினால் அதனை நிரூபிக்க முடியாது.

காரணம் உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபியவர்களின் பால் குடி அண்ணை என்றோ திருமணம் செய்ய தடுக்கப்பட்ட உறவு என்றொ எந்தவொரு ஆதாரத்தையும் எங்கும் காண முடியவில்லை. அப்படியிருந்திருந்தால் நாமே குறித்த செய்தியை ஆதாரபூர்வமானது உண்மையானது என்று ஏற்றுக் கொண்டிருப்போம்.

உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபியவர்களுக்கு அண்ணியப் பெண் என்பதினால் தான். நபியவர்கள் அவர்களின் மடியில் தூங்கியிருக்க மாட்டார்கள். உம்மு ஹராம் அவர்களும் நபியவர்களின் தலையை தொட்டு பேண் பார்த்திருக்க மாட்டார்கள்.

தனித்திருக்க வில்லை. இது இட்டுக்கட்டப் பட்ட செய்தி. புகாரி போன்ற அறிஞர்கள் அறியாமல் பதிவு செய்து விட்டார்கள். அறிஞர்கள் செய்த பிழையினால் நபியவர்கள் பிழை செய்ததாக எண்ணி விடக் கூடாது. அது ஹதீஸே அல்ல கட்டுக் கதை என்று தவ்ஹீத் ஜமாஅத் சொல்லி வருகிறது.

ஆகவே, நஸ்ரி மட்டுமல்ல, முழு ஸலபிக் கும்பலுக்கும் முடியுமென்றால் உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபியவர்களின் பால் குடி அண்ணை அல்லது திருமணம் முடிக்க தடுக்கப்பட்ட உறவு, அண்ணியப் பெண் அல்ல என்னதை ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா? அதற்கு அறிவிருக்கிறதா? என்று பார்ப்போம்.

உம்மு ஹராம் (ரலி) அவர்கள், நபியவர்களின் பால் குடி அண்ணையோ, திருமணம் செய்த தடுக்கப்பட்ட உறவோ அல்ல, அவர்கள் அண்ணியப் பெண்தான் என்பதுடன், நபியவர்களையும் உம்மு ஹராம் (ரலி) யும் தொடர்பு படுத்தி வரும் செய்தி பொய்யானது, இட்டுக்கட்டப்பட்டது என்பதை விரிவாக படிக்க கீழுள்ள லிங்கை பார்வையிடவும்.

http://www.sooniyam.com/?p=262

வீடியோவாக பார்க்க…

https://www.youtube.com/watch?v=KqudSORLxGE

https://www.youtube.com/watch?v=WHr_NNYKNtw

FacebookGoogle+TwittertumblrLinkedInEmail