சூனியத்தை உண்மை என்று நம்புபவன் சுவனம் நுழைய மாட்டான் என்ற ஹதீஸ் அஹ்மத் கிதாபில் இல்லையா? – வழிகேடர்களுக்கு பதில்

untitled

சூனியத்தை உண்மையென்று நம்புபவன் சுவனம் நுழைய மாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தியை நாம் சூனிய நம்பிக்கை பித்தலாட்டம் என்பதற்கான ஆதாரங்களில் ஒன்றாக எடுத்துக் காட்டுகிறோம்.

குறித்த செய்தி அஹ்மத் கிதாபில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அஹ்மத் கிதாபில் பதிவு செய்யப்பட்டுள்ள குறித்த செய்தியை அது அஹ்மத் கிதாபில் இல்லையென்றும், அது பலவீனமான செய்தியென்றும் இருவேறு விமர்சனங்களை சூனியக் கூட்டத்தினர் முன்வைத்து வருகிறார்கள்.

குறித்த செய்தி அஹ்மத் கிதாபில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது மறுக்க முடியாத ஒன்றாகும். இதே நேரம் இது ஆதாரபூர்வமான செய்தி தான் என்பதிலும் சந்தேகமில்லை. ஆகவே இந்த செய்தி தொடர்பில் சூனியக் கூட்டம் முன்வைக்கும் வாதங்களையும் அதற்குறிய பதில்களையும் நாம் இந்த ஆக்கத்தில் ஆராய இருக்கிறோம்.

சூனியத்தின் மூலம் இருப்பதை இல்லாமல் ஆக்க முடியும். இல்லாததை உண்டாக்க முடியும். ஒருவருடைய சிந்தனையில் பாதிப்பு ஏற்படுத்த முடியும். ஏன் ஒருவரை அதன் மூலம் கொல்வது கூட சாத்தியம். மொத்தத்தில் சூனியத்தால் எந்தப் பாதிப்பை வேண்டுமானாலும் ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை பலரிடம் உள்ளது.

இந்த நம்பிக்கை தவறானது. சூனியத்தை உண்மை என்று நம்பக்கூடாது என்று நாம் கூறி வருகின்றோம். இதற்கு பல குர்ஆன் வசனங்கள் ஆதாரமாக உள்ளன.

பின்வரும் ஹதீஸையும் நாம் ஆதாரமாகக் சுட்டிக்காட்டி வருகிறோம்.

.مسند أحمد – (ج 45 / ص 477) 26212 – حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ السُّوَيْدِيُّ قَالَ حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ سُلَيْمَانُ بْنُ عُتْبَةَ الدِّمَشْقِيُّ قَالَ سَمِعْتُ يُونُسَ بْنَ مَيْسَرَةَ عَنْ أَبِي إِدْرِيسَ عَائِذِ اللَّهِ عَنْ أَبِي الدَّرْدَاءِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَدْخُلُ الْجَنَّةَ عَاقٌّ وَلَا مُؤْمِنٌ بِسِحْرٍ وَلَا مُدْمِنُ خَمْرٍ وَلَا مُكَذِّبٌ بِقَدَرٍ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

விதியை மறுப்பவன், நிரந்தரமாக மது அருந்துபவன், சூனியத்தை உண்மை என்று நம்புபவன், (பெற்றோருக்கு) மாறு செய்பவன் ஆகியோர் சுவனத்தில் நுழைய மாட்டார்கள்.

அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி)

நூல் : அஹ்மது (26212)

இந்த நபிமொழி சூனியத்தை ஒருவன் நம்பினால் அவன் சொர்க்கம் செல்ல மாட்டான் என்பதைத் தெளிவான முறையில் சொல்கிறது. எந்த வியாக்கியானமும் கொடுக்க முடியாத வகையில் இதன் வாசக அமைப்பு அமைந்துள்ளது.

சூனியத்துக்கு ஈமான் கொண்ட கூட்டத்துக்கு இந்த ஹதீஸ் மரண அடியாக இருப்பதால் இதை மறுப்பதற்கு பலவாறாக முயற்சித்து வருகின்றனர்.

சூனியத்துக்கு ஈமான் கொண்டவர்கள். முஸ்னத் அஹ்மதில் இப்படி ஒரு ஹதீஸ் இல்லவே இல்லை என்று இவர்கள் அதிரடியாக மறுக்கிறார்கள்.

 பிரச்சனை சாப்டுவேரிலா? அல்லது இவர்களின் சிந்தனையிலா?

சூனியத்தை உண்மை என்று நம்புபவன் என்ற சொல் ஹதீஸின் சாப்டுவேரில் தவறுதலாக இடம்பெற்றது. மூல நூற்கள் எதிலும் இந்த வார்த்தை இடம்பெறவில்லை. எனவே சாப்டுவேரில் ஏற்பட்ட பிழையை ஆதாரமாக்கி முழுமையாக ஆய்வு செய்யாமல் நுனிப்புல் மேய்ந்துவிட்டு இந்த ஹதீஸை நாம் ஆதாரம் காட்டியதாக இவரும் அவரைச் சேர்ந்தவர்களும் சொல்லித் திரிகிறார்கள்.

சரியான ஆய்வும் தேடலும் இல்லாமல் வாய்க்கு வந்ததை உளறிவிட்டு மற்றவர்களைப் பார்த்து நுனிப்புல் மேய்ந்தாக இவர்கள் குற்றம் சாட்டினால் இந்த அறியாமையை என்னவென்பது?

முஃமினும் பிசிஹ்ர் مؤمن بسحر என்ற இந்த வார்த்தை இடம்பெற்ற அஹ்மதின் போட்டோ காப்பியை பார்க்கவும்.

 1468697_10152045876075030_479532808_n

 999295_10152045895315030_551036738_n

இது சாப்ட்வேர் காப்பியில் தவறுதலாகச் சேர்க்கப்பட்டதல்ல என்பதற்கு மேற்கண்ட அச்சுப்பிரதி ஆதாரமாக உள்ளது.

மேற்கண்ட அச்சுப்பிரதியில் இந்தப் பிரதியை சரிபார்த்தவர்களின் பெயர் பட்டியலும் இந்த போட்டோவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வார்த்தை இடம்பெற்ற நுாற்கள்

ஒரு நூலில் ஏதாவது விடுபட்டுள்ளதா? அல்லது கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை இன்னும் பலவழிகளில் நாம் உறுதி செய்து கொள்ள முடியும்.

பல ஹதீஸ் நூல்களில் உள்ளதைத் தொகுத்து எழுதப்பட்ட பல நூல்கள் உள்ளன. அல் முஸ்னதுல் ஜாமிஃ என்பது அது போன்ற நூலாகும். இதில் அஹ்மத், திர்மிதீ, இப்னு மாஜா, அபூதாவூத் உள்ளிட்ட பல நூல்களில் உள்ள ஹதீஸ்கள் தொகுத்து எழுதப்பட்டுள்ளன. நாம் சுட்டிக்காட்டிய அஹ்மத் நூலில் இடம் பெற்ற ஹதீஸை இந்த நூலில் பதிவு செய்து இது அஹ்மதில் உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

المسند الجامع (33/ 449)

6- عَنْ أَبِي إِدْرِيسَ عَائِذِ اللهِ ، عَنْ أَبِي الدَّرْدَاءِ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ، قَالَ: لاَ يَدْخُلُ الْجَنَّةَ عَاقٌّ ، وَلاَ مُؤْمِنٌ بِسِحْرٍ ، وِلاَ مُدْمِنُ خَمْرٍ ، وَلاَ مُكَذِّبٌ بِقَدَرٍ.

- لفظ هشام بن عمار : لاَ يَدْخُلُ الْجَنَّةَ مُدْمِنُ خَمْرٍ.

أخرجه أحمد 6/441(28032)

அஹ்மத் நூலில் இந்த ஹதீஸ் இடம்பெற்றதைப் பார்த்துத் தான் இவர் தொகுத்துள்ளார் என்பதாலும் இவர் தொகுக்கும்போது சாப்ட்வேர் காப்பி இருக்கவில்லை என்பதாலும் மேற்கண்ட செய்தி அஹ்மதில் உள்ளது தான் என்பது உறுதியாகிறது.

அது போல் அல்ஜாமிஉஸ் ஸஹீஹ் நூலிலும் இது அஹ்மதில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

الجامع الصحيح للسنن والمسانيد (2/ 619، بترقيم الشاملة آليا)

(حم) , وَعَنْ أَبِي الدَّرْدَاءِ – رضي الله عنه – قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ – صلى الله عليه وسلم -: ” لَا يَدْخُلُ الْجَنَّةَ عَاقٌّ، وَلَا مُؤْمِنٌ بِسِحْرٍ، وَلَا مُدْمِنُ خَمْرٍ، وَلَا مُكَذِّبٌ بِقَدَرٍ ” (1)

இப்னு கஸீா் அவா்களுக்குரிய ஜாமிஉல் மஸானீத் என்ற நுாலிலும் இந்த வார்த்தை இடம்பெற்றுள்ளது

جامع المسانيد والسنن (9 / 335):

11987 – حدثنا أبو جعفر السويدى، ثنا أبو الربيع سليمان بن عبيد الدمشقى، سمعت يونس بن ميسرة، عن أبى إدريس عائذ الله، عن أبى الدرداء، عن النبى – صلى الله عليه وسلم – قال: «لا يدخل الجنة عاق، ولا مؤمن بسحر، ولا مدمن خمر ولا مكذب بقدر» (1) .

ஹாபிள் இப்னு ஹஜா் அவா்களின் அத்ராபுல் முஸ்னத் நூலிலும் இந்த வார்த்தை தெளிவாக இடம்பெற்றுள்ளது.

إطراف المسند المعتلي بأطراف المسند الحنبلي (6 / 149):

7977 -[ق] حديث: لا يدخل الجَنَّةَ عاقٌّ، ولا مؤمنٌ بسِحْرٍ، ولا مُدْمِنُ خَمْرٍ، ولا مُكَذِّبٌ بقَدَر. (6: 441) حَدَّثَنا أبو جعفر السويدي، ثنا أبو الربيع سليمان بن عُتْبَة الدمشقي، سمعتُ يونس بن مَيْسَرة، عنه بهذا.

விடுபட்டதைக் கண்டறியும் ஆய்வு

இந்த இரண்டு நுாற்களும் முஸ்னது அஹ்மது கிதாப் தொடா்பாக எழுதப்பட்டவை.

இந்த இரண்டு நுாற்களை அடிப்படையாகக் கொண்டே விடுபட்ட வார்த்தைகளை இணைப்பது போன்ற பல பிரச்சனைகளுக்கு அர்னாஉத் உட்பட பலா் தீா்வு கண்டுள்ளனா். இதற்கு உதாரணங்கள ஏராளம். ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் இங்கே குறிப்பிடுகின்றோம்.

மைமனிய்யா பதிப்பில் அஹ்மதின் 7152 வது ஹதீஸில் துணையின்றி யாரும் இருக்க மாட்டார் என்று சொல்லப்பட்டுள்ளது. சொர்க்கத்தில் யாரும் துணையின்றி இருக்க மாட்டார் என்பதே சரியானது. சொர்க்கத்தில் என்ற சொல் இங்கே மைமனிய்யா பதிப்பில் விடுபட்டுள்ளது. அஹ்மது கிதாப் தொடா்பாக எழுதப்பட்ட மற்ற நுால்களை வைத்தே அறிஞர் அா்னாஉத் இந்த வார்த்தை விடுபட்டுள்ளது என்று உறுதி செய்கின்றார்.

مسند أحمد ط الرسالة (12 / 64):

7152 – حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ مُحَمَّدٍ، قَالَ: إِمَّا تَفَاخَرُوا، وَإِمَّا تَذَاكَرُوا الرِّجَالُ أَكْثَرُ فِي الْجَنَّةِ أَمِ النِّسَاءُ؟ قَالَ أَبُو هُرَيْرَةَ: أَوَ لَمْ يَقُلْ أَبُو الْقَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِنَّ أَوَّلَ زُمْرَةٍ تَدْخُلُ الْجَنَّةَ عَلَى صُورَةِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ، وَالَّتِي تَلِيهَا عَلَى أَضْوَإِ كَوْكَبٍ دُرِّيٍّ فِي السَّمَاءِ، لِكُلِّ امْرِئٍ مِنْهُمْ زَوْجَتَانِ ثِنْتَانِ، يُرَى مُخُّ سَاقِهِمَا مِنْ وَرَاءِ اللَّحْمِ، وَمَا فِي الْجَنَّةِ أَعْزَبُ ” (1)قوله: “في الجنة” أثبتناه من (ظ 3) و (عس) ، وسقط من (م) وباقي النسخ.

சொர்க்கத்தில் என்ற சொல் மைமனிய்யா பதிப்பிலும் மற்ற பிரதிகளிலும் இடம்பெறவில்லை. மாறாக ளாஹிரிய்யா என்ற பிரதியிலிருந்தும் இப்னு அஸாகிர் அவர்களின் நுாலிலிருந்தும் அதை நாம் அஹ்மது கிதாபில் உள்ளது என உறுதிப்படுத்தியுள்ளோம்.

(முஸ்னது அஹ்மது கிதாபின் முன்னுரை)

ஒரு கிதாபில் ஏற்பட்டுள்ள தவறுகளைக் கண்டுபிடிப்பதற்கும் அதைத் திருத்துவதற்கும் இதுவே சரியான வழிமுறை. நூலைச் சரிபார்க்கும் ஆய்வில் இறங்கும் அறிஞர்கள் இந்த முறையில் தான் தவறுகளைக் கண்டுபிடித்து திருத்துவார்கள்.

அஹ்மது கிதாபைச் சரிபார்த்த அறிஞர் அா்னாஉத் கூறுவதைப் பாருங்கள்.

 مسند أحمد ط الرسالة (12 / 18):

7122 – حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ شُعْبَةَ (1) ، عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّهُ (2) مَرَّ بِقَوْمٍ يَتَوَضَّئُونَ، فَقَالَ: أَسْبِغُوافي (م) والأصول الخطية: شعيب، وهو تحريف، والتصويب من (عس) و”أطراف المسند” 2/ورقة 126، ومن المواضع التي سيتكرر فيها الحديث، ومن مصادر التخريج.

 மைமனிய்யா பதிப்பிலும் மற்ற அசல் பிரதிகளிலும் ஷூஐப் என்று இடம்பெற்றுள்ளது. இது தவறாகும். இப்னு அஸாகிர் அத்ராபுல் முஸ்னத் மேலும் இந்த ஹதீஸ் திரும்ப திரும்ப இடம்பெறும் இடங்கள் மற்றும் இதே ஹதீஸ் வேறு எந்த நுாற்களில் தொகுப்பட்டது என்பதைப் பற்றி பேசும் நுாற்கள் (குதுபுத் தக்ரீஜ்) ஆகியவற்றில் ஷூஃபா என்றே இடம்பெற்றுள்ளது. அதுவே சரியானது.

(முஸ்னது அஹ்மது கிதாபின் முன்னுரை)

ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நுாற்கள்

மைமனிய்யா போன்ற சில பிரதிகளில் இடம்பெற்றுள்ள தவறுகளைக் கண்டுபிடிக்க இப்னு ஹஜர் அவர்களின் அத்ராபுல் முஸ்னது மற்றும் இப்னு கஸீா் அவா்களின் ஜாமிஉல் மசானீத் மற்றும் சில நுாற்களை நான் ஆதாரமாக கொள்வேன் இன்று முன்னுரையில் அறிஞர் அர்னாஉத் கூறியுள்ளார்.

مسند أحمد ط الرسالة (1 / 132):

أما المصنَّفاتُ التي لها علاقةٌ بالمسند، والتي استعنّا ببعضها في استكمالِ التحقيق، وتداركِ السقط الذي وقع في الأصول المعتمدة، والطبعة الميمنية فهي:

1- إطراف المُسْنِد المعتلي بأطراف المُسْنَد الحنبلي، للحافظ ابن حجر، في مجلدين.

4- جامعُ المسانيد والسُّنن الهادي لأقوم سَنَن. تأليف الحافظ أبي الفداء إسماعيل بن عمر بن كثير الدمشقي، المتوفى سنة (774 هـ) :

இதே அடிப்படையில் தான் முஸ்னத் அஹ்மது கிதாபை சரிபார்த்த அறிஞா் குழுவும் முஃமினும் பிசிஹிர் என்ற சொல் அஹ்மது கிதாபில் உள்ளது தான் என உறுதிப்படுத்தி இருக்கின்றார்கள்.

தாரீகு திமஸ்க் நுாலை மறுக்க முடியுமா?

இதே அறிவிப்பாளர் தொடரின் வழியாக இதே செய்தி இப்னு அசாகிர் அவர்களுக்குரிய தாரீகு திமஷ்கு என்ற நூலில் பதிவாகியுள்ளது. அங்கும் முஃமினும் பிசிஹிர் (சூனியத்தை நம்புபவன் சுவனம் செல்ல மாட்டான்) என்ற சொல் இடம்பெற்றுள்ளது. தாரீகு திமஷ்க் அறிவிப்பைப் பாருங்கள்.

تاريخ دمشق (56/ 135)قال وحدثني ابي ( 8 ) نا أبو جعفر السويدي نا أبو الربيع سليمان بن عتبة الدمشقي قال سمت يونس بن ميسرة عن أبي إدريس عائذ الله عن أبي الدرداء عن النبي ( صلى الله عليه وسلم ) قال لا يدخلن الجنة عاق ولا مؤمن بسحر ( 9 ) ولا مدمن خمر ولا مكذب بقدر

தாரீகு திமஷ்கிலும் இந்தச் சொல் தவறுதலாக இடம்பெற்றுள்ளது என்று இவர்கள் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. வாய்க்கு வந்ததைக் கூறுபவர்கள் எதை வேண்டுமானாலும் கூறுவார்கள். இப்னு அஸாகிர் அவர்கள் தொகுத்த தாரீகு திமஸ்க் என்ற நுால் அஹ்மது கிதாபை சரிபார்ப்பதற்குரிய மிக வலுவான ஆதாரமாகும்.

ஏனென்றால் அஹ்மது கிதாபின் ஆரம்பகால பழைய அசல் பிரதிகளை இப்னு அஸாகிர் பெற்றிருந்தார். பின்வந்த பிரதிகளைச் சரிபார்க்க எது அடிப்படையாக இருந்ததோ அந்த பழைய பிரதிகளை பெற்றவர் இப்னு அஸாகிர் ஆவார். இந்தத் தகவலை அறிஞர் அர்னாஉத் முன்னுரையில் குறிப்பிடுகின்றார்.

مسند أحمد ط الرسالة (1 / 104)

1- نسخة المكتبة القادرية (2) ببغداد تحت رقم (661) وقد رمزنا إليها بالرمز (ق) .

وهذه النسخة متقنة يَنْدُرُ وقوعُ الخطأ فيها، نُسخت بخطٍّ جميل واضح، حديثِ العهد، فقد كتبت في أواخر القرن الثالث عشر الهجري، وهي نسخة مقابلة على نسخٍ صحيحة، بعضُها قديم قد تداولها أهلُ العلم كابنِ عساكر وغيره من أئمة الحديث، كما يظهر ذلك مما كتبه الشيخ أبو الخير

அஹ்மது கிதாபிற்கு பல பிரதிகள் உள்ளன. அதில் காதிரிய்யா என்ற பிரதி உறுதி செய்யப்பட்டது. இதில் தவறுகள் குறைவாக உள்ளது. ஏனென்றால் மிகச் சரியான பழைய பிரகளுடன் இது சரிபார்க்கப்பட்டள்ளது. அந்த பழைய பிரதிகளை இப்னு அஸாகிர் மற்றும் அவரைப் போன்ற ஹதீஸ் துரை அறிகர்கள் பயன்படுத்தியுள்ளனா்.

(மொழிபெயர்ப்பு)

எனவே தான் அஹ்மது கிதாபை ஆய்வு செய்யும் அறிஞா்கள் தாரீகு திமஸ்க் என்ற நுாலை அஹ்மது கிதாபின் வலுவான சரியான மூலப்பிதிகளில் ஒன்றாகவே கருதுகின்றனா்.

இப்னு அஸாகிர் அவர்கள் முஃமினும் பிசிஹ்ர் என்ற சொல் இடம்பெற்ற ஹதீஸை எப்படி பதிவு செய்துள்ளார் என்று பார்த்தால் இந்த வார்த்தை அஹ்மது கிதாபில் உள்ளது என்பதை சுயபுத்தி உள்ள யாரும் மறுக்க முடியாது.

அதாவது முஃமினும் பிசிஹ் என்ற வார்த்தை இடம்பெற்ற செய்திக்கு இப்னு அஸாகிர் அவா்கள் அறிவிப்பாளர் தொடரை சொல்லும் போது இந்த ஹதீஸ் அஹ்மது இமாமிடமிருந்து தனக்கு யார்? யார்? வழியாக வந்தது என்ற முழு விபரத்தையும் பட்டியலிடுகின்றார். அந்த பெயர் பட்டியலைப் பாருங்கள்.

تاريخ دمشق لابن عساكر (56 / 135):

أخبرنا أبو القاسم بن الحصين أنا أبو علي بن المذهب أنا أبو بكر بن مالك أنا عبد الله حدثني أبي (6) نا محمد بن النوجشان وهو أبو جعفر السويدي نا الدراوردي حدثني زيد بن أسلم (7) عن أبي واقد الليثي عن أبيه أن النبي (صلى الله عليه وسلم) قال لأزواجه في حجة الوداع هذه ثم ظهور الحصر قال وحدثني ابي (8) نا أبو جعفر السويدي نا أبو الربيع سليمان بن عتبة الدمشقي قال سمت يونس بن ميسرة عن أبي إدريس عائذ الله عن أبي الدرداء عن النبي (صلى الله عليه وسلم) قال لا يدخلن الجنة عاق ولا مؤمن بسحر (9) ولا مدمن خمر ولا مكذب بقدر أخبرنا أبو القاسم النسيب وابو الحسن المالكي قالا نا وابو منصور بن زريق

நபி (ஸல்) அவா்கள்

அபூ இத்ரீஸ் ஆயிதுல்லாஹ்

யூனுஸ் பின் மைசரா

சுலைமான் பின் உத்பா

அபூ ஜஃபர் சுலைவதீ

அஹ்மது பின் ஹம்பள்

அஹ்மது இமாமின் மகன் அப்துல்லாஹ்

அபூபக்ர் பின் மாலிக்

அபூ அலி பின் முத்ஹிப்

அபுல் காசிம் பின் ஹஸீன்

இமாம் இப்னு அஸாகிர்

நபி (ஸல்) அவா்களிடமிருந்து இமாம் அஹ்மது பின் ஹம்பளைத் தாண்டி இப்னு அஸாகிர் அவர்கள் வரை இதன் அறிவிப்பாளர் தொடா் நீண்டுள்ளது. இந்தச் செய்தியில் தான் முஃமினும் பிசிஹிர் என்ற சொல்லும் இடம்பெற்றுள்ளது. அப்படியானால் இந்தச் சொல் அஹ்மது கிதாபில் உள்ளது தான் என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்?

எனவே இவர்கள் தாங்கள் கொண்ட கொள்கையை நிலைநாட்ட எப்படிப்பட்ட காரியத்தையும் செய்வார்கள் என்பதை அறிய முடிகின்றது.

இதன் பிறகும் மைமனிய்யா பதிப்பில் இந்தச் சொல் இடம்பெறவில்லையே என்று அறிவுள்ளவர்கள் கேட்கமாட்டார்கள்.

மைமனிய்யா பதிப்பைப் பொறுத்தவரை அதில் ஏராளமான தவறுகள் உள்ள பதிப்பாகும். அஹ்மது கிதாபின் ஹதீஸ்களில் உள்ள பல வார்த்தைகள் இதில் விடுபட்டுள்ளன. ஏன் பல ஹதீஸ்களும் ஹதீஸ் தொகுப்புகளும் கூட இந்தப் பதிப்பில் விடுபட்டிருக்கின்றது. பல ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர்களும் மாற்றப்பட்டு தவறுதலாக இதில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பதிப்பில் உள்ள தவறுகளால் தான் அஹ்மது ஷாகிர், ஷூஐப் அா்னாஉத் போன்ற அறிஞர்கள் அஹ்மது கிதாபை சரிபார்க்கும் வேலையில் இறங்கினார்கள். இந்தத் தகவலை அர்னாஉத் தனது முன்னுரையில் குறிப்பிடுகின்றார்.

مسند أحمد ط الرسالة (1 / 36):

1- الطبعة الميمنية المعروفة فيها تحريفٌ كثير وتصحيفٌ، وقد سقط منها أحاديثُ ومسانيدُ، كما وقع فيها بعضُ أحاديث مما رواه عبد الله عن غيرِ أبيه على أنها من مسند أبيه، وبالعكس.

அறிவிப்பாளர் தொடரில் கோளாரா?

அடுத்ததாக இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் சரியில்லை எனவும் சூனியத்தை ஈமான் கொண்டவர்கள் வாதிடுகின்றனர்.

மேற்கண்ட ஹதீஸில் அபூ ஜஃபர் அஸ்ஸுவைதி என்ற அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார். இவரை தான் சூனியத்தை ஈமான் கொண்டவர்கள் விமர்சனம் செய்கிறார்கள்.

விமா்சனம்

இந்த அபூ ஜஃபர் அஸ்ஸுவைதி யார்?

இவர் நம்கமானவர் என்றாலும் ஹதீஸ் விடயத்தில் சந்தேகப்படக்கூடியவராக இருந்தார் என்று இவரைப்பற்றி  இமாம் “அபூ தாவூத் அஸ்ஸிஜிஸ்தானி” அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். நம்பகமான ஒருவருக்கு மாற்றமாக அல்லது மேலதிக விமர்சிக்கப்பட்ட ஒருவர் அறிவிக்கும் போது அந்த அறிவிப்பு மறுக்கப்படும் என்பது ஏற்றுகொள்ளப்பட்ட ஹதீஸ்கலை விதியாகும். ஒரு வேளை இந்த வார்த்தையை அபூ ஜஃபர் அஸ்ஸுவைதி கூறி இருந்தாலும் அதை அவர் சந்தேகத்துடனே சொல்லி இருக்கின்றார் என்பதற்கு அவரைப்பற்றி கூறப்பட்டுள்ள விமர்சனம் போதுமான சான்றாகும். ஏனெனில் அவரை விட நம்பகமான மூவருக்கு மாற்றமாக அவர் இந்த வார்த்தையை சேர்த்தியே கூறியுள்ளார்.

நமது விளக்கம்

இந்த விமர்சனத்தில் இருந்து இவர்களின் அளவற்ற அறியாமை வெளிப்படுகிறது.

முதல் அறியாமை

மேற்கண்ட அறிவிப்பாளர் சந்தேகப்படக் கூடியவராக இருந்தார் என்ற விமர்சனத்தில் இவரது மடமை பளிச்சிடுகிறது.

இந்தச் சொல்லுக்கு இவர்கள் கொண்ட கருத்து வராது. இவரது ஹதீஸ்கள் சந்தேகத்துக்கு உரியது என்பது இதன் கருத்து அல்ல. இவர் கேள்விப்படும் ஹதீஸ்களில் சந்தேகம் எழுப்புவார் என்பதுதான் இதன் கருத்து. நூறு ஹதீஸ்களைக் கேட்டால் அந்த நூறையும் அறிவித்து விடாமல் அதில் பல சந்தேகங்களை எழுப்பி எல்லா சந்தேகங்களுக்கும் தீர்வு இருக்கும் பத்து ஹதீஸ்களைத் தான் அறிவிப்பார் என்பதுதான் இதன் கருத்து.

சிறிதளவு சந்தேகம் வந்தால் கூட இவர் எந்த ஹதீஸையும் அறிவிக்க மாட்டார். தனக்கு சந்தேகம் இல்லாததைத்தான் அறிவிப்பார் என்ற புகழ்மாலையை இவர்கள் தலைகீழாகப் புரிந்து கொண்டார்.

இவர் குறித்து அஹ்மத் பின் ஹம்பல் கூறுவதைப் பாருங்கள்

حدثنا عَنْهُ أحمد بْن حنبل، وكان صاحب شكوك. رجع النّاس من عند عبد الرّزّاق بثلاثين ألف حديث، ورجع بأربعة آلاف.

இவர் ஹதீஸில் சந்தேகம் கொள்பவராக இருந்தார்; இமாம் அப்துர் ரஸ்ஸாக்கிடமிருந்து மற்றவர்கள் முப்பதாயிரம் ஹதீஸ்களைப் பெற்றார்கள். ஆனால் இவர் ஒருவா் நான்காயிரம் ஹதீஸ்களைத் தான் பெற்றார்.

முப்பதாயிரம் ஹதீஸ்களில் இருபத்து ஆறாயிரம் ஹதீஸ்களை ஒதுக்கி விட்டு நான்காயிரம் ஹதீஸ்களை மட்டுமே எடுத்துக் கொண்டது அவரது அளவற்ற பேணுதலைக் குறிக்கிறது.

அவரது ஹதீஸில் சந்தேகம் உள்ளது என்று சொன்னால் தான் இந்த வழிகேடர்கள் சொன்ன அர்த்தம் வரும். ஹதீஸ்களில் அவர் சந்தேகம் எழுப்புவார் என்றால் அதற்கு நேர்முரணான அர்த்தத்தைத் தான் தரும்.

இவர் எந்த அளவுக்கு ஹதீஸ் கலை அறிந்தவர்களாக உள்ளனர் என்பதை இதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

இரண்டாவது அறியாமை

இவர்கள் கூறுவது போன்ற கருத்தில் தான் இவரது விமர்சனத்துக்கு அர்த்தம் உள்ளது என்றே வைத்துக் கொள்வோம்.

இதை வைத்துக் கொண்டு ஒரு முடிவு எடுப்பவர் அறிவுடையவராக இருக்க முடியுமா?

இவரைப் பற்றி மற்றவர்கள் என்ன சொன்னார்கள் என்பதைப் பார்க்க வேண்டாமா? அந்த விமர்சனங்கள் சரியில்லை. இவர் பலவீனமானவர் என்பதுதான் சரியான விமர்சனம் என்று பட்டியல் போட்டு நிரூபிக்க வேண்டாமா?

இவர்கள் விரும்பி இருந்தால் அந்த விமர்சனங்களை எடுத்துப் பார்ப்பது எளிதானதுதான். ஆனால் சூனியத்தின் மீது கொண்ட ஈமான் காரணமாகவும் தான் சொன்னது தவறு என்றால் தனது மரியாதை என்னாவது என்ற என்ற கர்வம் காரணமாகவும் தான் இவர்கள் அந்த விமர்சனங்களை அனைத்தையும் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்கிறார்கள்.

அந்த விமர்சனங்களைப் பாருங்கள். அதன் பின்னர் இவர்கள் மார்க்கம் சொல்வதில் நம்பகமானவரா என்று சிந்தியுங்கள்.

التذييل علي كتب الجرح والتعديل (1/ 293)

(791) تع- ل- محمد بن النوشجان السُّويدي البغدادي أبو جعفر:

روى عن سويد بن عبد العزيز، ويحيى بن سليمان، والوليد بن مسلم. وعنه أحمد بن حنبل. قال أبو حاتم: “لا أعرفه”، وقال البخاري: “إنما قيل له السويدي، لأنه رحل إلى سُويد بن عبد العزيز”، ذكره ابن حِبَّان في “الثقات”.ا. هـ.

قلت: قال الآجري، عن أبي داود السجستاني: “ثقة، حدثنا عنه أحمد، كان صاحب شكوك في الحديث، رجع الناس من عند عبد الرزاق بثلاثين ألفًا، ورجع بأربعة آلاف”، وقال السمعاني في “الأنساب”: “كان صدوقًا ثقة، محُتاطًا في الأخذ” (2).

அபூதாவூத் அவர்கள் இவரை சிகத் (நம்பகமானவா்) என்றே குறிப்பிடுகின்றார்.

சன்ஆனி என்ற அறிஞா் இவரை சிகத் சதூக் (உண்மையாளா். நம்பகமானவா்) ஹதீஸ்களைப் பெறுவதில் பேணுதலானவா் என்று கூறியுள்ளார்.

இமாம் இப்னு ஹிப்பான் அவர்களும் இவரை நம்பகமானவா் (சிகத்) என்று கூறியுள்ளார்.

இமாம் தஹபீ அவர்கள் இவரை ஹாபிள் என்று கூறி நம்பகத்தன்மையில் முதலிடத்தில் குறிப்பிடுகின்றார்

. تاريخ الإسلام ت بشار (5 / 453): 388 – محمد بن النُّوشَجان، أبو جعفر البَغْداديُّ السُّوَيْديّ الحافظ، [الوفاة: 211 – 220 ه] لُقّب بذلك لرحلته إلى سُوَيد بن عبد العزيز الدّمشقيّ.

ஹாபிள் அபூ ஜஃபர் அஸ்ஸுவைதி ஹதீஸை அறிவிப்பதிலும் பெறுவதிலும் மிக பேணுதலானவா். ஆயிரக்கணக்கான ஹதீஸ்களை மனனம் செய்தவர்.

மூன்றாவது அறியாமை

இந்த செய்தியை விமர்சிப்பவர்கள் இவ்வாறு வாதிடுகிறார்கள்.

ஒரு வேளை இந்த வார்த்தையை அபூ ஜஃபர் அஸ்ஸுவைதி கூறி இருந்தாலும் அதை அவர் சந்தேகத்துடனே சொல்லி இருக்கின்றார் என்பதற்கு அவரைப்பற்றி கூறப்பட்டுள்ள விமர்சனம் போதுமான சான்றாகும்.

அபூஜஃபர் அவர்கள் இதைச் சந்தேகத்துடன் கூறியுள்ளாராம். சந்தேகத்துடன் கூறுவது என்றால் சிஹரை நம்புபவன் என்று நபி சொன்னார்களா அல்லது வேறு எதுவும் சொன்னார்களா என்று அவர் கூறினால் அவர் சந்தேகத்துடன் அறிவித்துள்ளார் என்று சொல்லலாம்.

அல்லது இப்படி சொன்னதாக நான் நினைக்கிறேன் என்று அவர் சொல்லி இருந்தால் அப்போதும் அவர் சந்தேகத்துடன் அறிவித்தார் என்று சொல்ல முடியும். மேற்கண்ட ஹதீஸில் அவர் உறுதியாகத் தான் சொல்கிறார்.

இவர்களது எல்லை மீறிய அறியாமை இப்போது தெரிகிறதா?

இன்னும் சொல்லப் போனால் மற்றவர்கள் அறிவிப்பதில் ஏதாவது சந்தேகம் வந்தால் இவரது அறிவிப்பு அதை நீக்கிவிடும். அந்த அளவுக்கு சந்தேகமானதைத் தவிர்த்தவர் தான் அபூஜஃபர் அவர்கள்.

நான்காவது அறியாமை

மற்றவர்கள் அறிவிப்பதற்கு இவர் மாற்றமாக அறிவித்துள்ளார் எனவும் இவர்கள் வாதிடுகிறார்கள்.

சூனியத்தை நம்பினால் சொர்க்கம் செல்வான் என்று மற்றவர்கள் அறிவித்து இருந்தால் தான் இவர் மாற்றமாக அறிவித்தார் என்று சொல்ல முடியும். மற்றவர்கள் அறிவிக்காததை இவர் அறிவித்தால் இது கூடுதல் தகவல் தானே தவிர இது முரண் அல்ல.

தக்லீத் வெறியும் மத்ஹபு வெறியும் இவர்களின் உச்சந்தலையில் நன்கு ஏறிவிட்டது. அதனால் தான் நபிகளாரின் இந்தச் சொல்லை மறுப்பதற்கு இவ்வளவு பித்தலாட்ட வேலைகளையும் நல்லறிஞா்களை நாசப்படுத்தும் வேலையையும் இவர்கள் செய்கிறார்கள்.

இட்டுக்கட்டப்பட்ட செய்தியா? ஏற்றுக்கொள்ளப்பட்ட செய்தியா?

விதண்டாவாதம்

//ஆக எந்த வகையில் பார்த்தாலும் இவர்கள் முக்கிய ஆதாரமாக எடுத்துவைத்த இந்த வார்த்தை ஆதாரம் அற்ற அடிப்படை அற்ற தூக்கி எறியப்படவேண்டிய இட்டுகட்டப்பட்ட செய்தியாக மாறிவிடுகின்றது ஆனால் இந்த வார்த்தையை அபூ ஜஃபர் அஸ்ஸுவைதியும் கூறவில்லை முஸ்னத் அஹ்மதிலும் இவ்வாறான ஒரு தகவல் இடம்பெறவில்லை என்று ஆதாரங்களுடன் நாம் தெளிவுபடுத்தி உள்ளோம் அல்ஹம்துலில்லாஹ்//

நமது விளக்கம்

இவர்கள் ஏற்றுக்கொண்ட ஹதீஸ்கலை விதியின் அடிப்படையில் சிந்தித்தால் இது ஆதாரப்பூா்வமான செய்தி என்பதை மறுக்க முடியாது. இப்படிப்பட்ட செய்தியை இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்று கூறுகிறார்கள் என்றால் நம்மீதுள்ள கோபத்தால் இவர்கள் சுய நினைவு இழந்துள்ளார்கள் என்பதே உண்மை.

இந்த சூனியக்கார கும்பலைத் தவிர வேறு எந்த அறிஞரும் இந்த ஹதீஸை இட்டுக்கட்டப்பட்டது என்று கூறவில்லை. இந்த ஹதீஸைச் சரிகண்ட அறிஞா்களின் விபரத்தைப் பாருங்கள். இந்த அறிஞர்கள் இதைச் சரிகண்ட விதம் நாம் சொல்லாத வேறு விதமாக இருந்தாலும் அவர்கள் இந்தச் செய்தியை அங்கீகரித்துள்ளனா்.

ஹைஸமீ, அல்பானி, பஸ்ஸார் ஆகியோர் இந்த ஹதீஸை ஹசன் என்று கூறி ஏற்றுள்ளனா். மற்றும் பல அறிஞரும் இவ்வாறு கூறியுள்ளனா்.

விதண்டாவாதம்

/// ஒரு வாதத்துக்கு இந்த வார்த்தை முஸ்னத் அஹ்மதில் இடம்பெற்றுள்ளது என்று இவர்கள் கூறினாலும் அது ஆதாரமான செய்தியல்ல இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில்  “ஸுலைமான் இப்னு உத்பா”” என்பவர் இடம்பெறுகின்றார் இவரைச் சில அறிஞர்கள் நம்பகம் என்று கூறினாலும் மற்றும் சிலர் குறை உள்ளவர் என விமர்சித்துள்ளார்கள் இவ்வாறு சிலரால் குறையுள்ளவர் என்று கூறப்பட்டவரை ஏற்றுக் கொள்ளலாமா? என்ற விடயத்தில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது.

என்றாலும் இந்த இடத்தில் இவரை நம்பகம் என்று ஏற்றுகொள்ள முடியாது ஏனெனில் இந்தச் செய்தி இன்னுமொரு காரணத்தால் பலஹீனத்துக்கு மேல் பலஹீனமாகின்றது. இந்த சுலைமானிடமிருந்து நான்கு பேர் அறிவிப்பதாக கூறி இருந்தோம். இந்த நான்கு பேரில் “சூனியத்தை நம்பியவன் சுவனம் செல்லமாட்டான்” என்ற தகவலை கூட்டி அறிவிக்கும் அபூ ஜஃபர் அஸ்ஸுவைதி என்பவரைத் தவிர மற்ற மூவரும் நம்பகமானவர்கள்

1:ஸுலைமான் இப்னு அப்துரஹ்மான்  (உண்மையாளர் என்றாலும் தவறு விடக்கூடியவர் )

2:ஸியாம் இப்னு அம்மார் (நம்பகமானவர் என்றாலும் வயதான பின் தவரிளைத்தவர்)

3:ஹைதம் இப்னு ஹாரிஜா (இவர் நம்பகமானவர் குறை கூறப்படாதவர்)

இந்த மூவரும் கூறாத ஒன்றை அபூ ஜஃபர் அஸ்ஸுவைதி மேலதிகமாகச் சொல்கின்றார் ////

நமது விளக்கம்

சுலைமான் பின் உத்பா பலவீனமானவரா?

அறிவிப்பாளர் சுலைமான் பின் உத்பா விசயத்திலும் இவர்கள் உண்மைக்குப் புறம்பாகவே நடந்துள்ளனா். இவர் நம்பகமானவர் என்று பலா் நற்சான்று அறிவித்துள்ளனா்.

துஹைம், அபூ ஹாதிம், அபூ சுா்ஆ, ஹைஸம் பின் காரிஜா, ஹிசாம் பின் அம்மார், இப்னு ஹிப்பான், இப்னு ஹஜா், தஹபீ ஆகியோர் கூறியுள்ளனா். இவர்கள் யாரும் இவரை பலவீனமானவா் என்று கூறவில்லை.

அறிஞா்களின் ஒட்டுமொத்தக் கருத்தையும் கவனித்து சாறு பிழிந்து கூறும் இப்னு ஹஜா் அவர்களும் தஹபீ அவர்களும் இவரை ஸதூக் – உண்மையாளர் என்றே கூறுகின்றனா்.

இமாம் யஹ்யா பின் மயீன் மட்டுமே இவரைக் குறைகூறியுள்ளார். அந்தக் குறை காரணம் இல்லாமல் உள்ளது. பலருக்கு மாற்றமாக இவர் ஒருவர் மட்டும் காரணம் கூறாமல் பொத்தாம் பொதுவாகக் குறை சொன்னால் அந்தக் குறை ஹதீஸ் கலையில் நிராகரிக்கப்பட்டு விடும். இந்த அடிப்படை புரியாமல் சுலைமான் பின் உத்பாவையும் இவர்கள் பலவீனமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா்.

ஒரு நம்பகமானவா் மற்ற பல நம்பகமானவர்களுக்கு மாற்றமாக அறிவித்தால் தான் அதை நிராகிக்க வேண்டும். மற்றவா்கள் அறிவிக்காத மேலதிக தகவலை ஒருவா் அறிவித்தால் இதை நிராகரிப்பது கூடாது. முஃமின் பி சிஹ்ர் என்ற சொல்லை அபூ ஜஃபர் அஸ்ஸுவைதியைத் தவிர வேறு யாரும் அறிவிக்கவில்லை என்று விமா்சிக்கின்றனா்.

இது எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது. ஏனென்றால் அபூ ஜஃபர் அஸ்ஸுவைதி நம்பகமானவர். மற்ற எவரையும் விட உறுதியானர் என்பதை நாம் முன்னர் நிரூபித்துள்ளோம்.

நபிமொழி விளக்கம்

இந்த நபிமொழி ஆதாரப்பூர்வமானது என்பதை நாம் நிரூபித்து விட்டோம். இந்த நபிமொழியில் இருந்து நாம் விளங்க வேண்டிய விஷயங்களை இப்போது பார்ப்போம்.

مسند أحمد – (ج 45 / ص 477) 26212 – حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ السُّوَيْدِيُّ قَالَ حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ سُلَيْمَانُ بْنُ عُتْبَةَ الدِّمَشْقِيُّ قَالَ سَمِعْتُ يُونُسَ بْنَ مَيْسَرَةَ عَنْ أَبِي إِدْرِيسَ عَائِذِ اللَّهِ عَنْ أَبِي الدَّرْدَاءِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَدْخُلُ الْجَنَّةَ عَاقٌّ وَلَا مُؤْمِنٌ بِسِحْرٍ وَلَا مُدْمِنُ خَمْرٍ وَلَا مُكَذِّبٌ بِقَدَرٍ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :விதியை மறுப்பவன் நிரந்தரமாக மது அருந்துபவன் சூனியத்தை உண்மை என்று நம்புபவன் (பெற்றோருக்கு) மாறு செய்பவன் ஆகியோர் சுவனத்தில் நுழைய மாட்டார்கள்.

அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி), நூல் : அஹ்மது (26212)

சூனியத்தை உண்மை என்று நம்புபவன் சுவனம் செல்ல முடியாது என்று இந்த நபிமொழி கூறுகின்றது. சூனியம் குறித்து ஒரு இறை நம்பிக்கையாளனின் நம்பிக்கை எப்படி இருக்க வேண்டும் என தெள்ளத் தெளிவாக இந்த நபிமொழி எடுத்துரைக்கின்றது.

அதாவது சூனியம் என்று ஒரு வேலை உள்ளது என்று நம்பலாம். ஆனால் அதை உண்மை என்று நம்பக்கூடாது. அப்படியானால் இதன் பொருள் என்ன? சூனியத்தின் பெயரால் அதைச் செய்ய முடியும். இதைச் செய்ய முடியும் என்று பலவிதமான கருத்துக்களை வழிடேர்கள் கூறுவார்கள். அதை உண்மை என்று நாம் நம்பக்கூடாது. அவை பொய் என்றே நம்ப வேண்டும். இதைத் தான் இரண்டாவது கருத்திற்கு இடமின்றி தெளிவாக மேற்கண்ட நபிமொழி கூறுகின்றது.

நபி (ஸல்) அவர்கள் இதே அடிப்படையில் இன்னொரு செய்தியைக் குறிப்பிட்டுள்ளார்கள்.

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ أَنَّهُ قَالَ صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الصُّبْحِ بِالْحُدَيْبِيَةِ عَلَى إِثْرِ سَمَاءٍ كَانَتْ مِنْ اللَّيْلَةِ فَلَمَّا انْصَرَفَ أَقْبَلَ عَلَى النَّاسِ فَقَالَ هَلْ تَدْرُونَ مَاذَا قَالَ رَبُّكُمْ قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ أَصْبَحَ مِنْ عِبَادِي مُؤْمِنٌ بِي وَكَافِرٌ فَأَمَّا مَنْ قَالَ مُطِرْنَا بِفَضْلِ اللَّهِ وَرَحْمَتِهِ فَذَلِكَ مُؤْمِنٌ بِي وَكَافِرٌ بِالْكَوْكَبِ وَأَمَّا مَنْ قَالَ بِنَوْءِ كَذَا وَكَذَا فَذَلِكَ كَافِرٌ بِي وَمُؤْمِنٌ بِالْكَوْكَبِ

ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஹுதைபியா’ எனுமிடத்தில் எங்களுக்கு சுப்ஹுத் தொழுகை தொழுவித்தார்கள்.-அன்றிரவு மழை பெய்திருந்தது.- தொழுது முடித்ததும் மக்களை நோக்கி நேராகத் திரும்பி, “உங்கள் இறைவன் என்ன கூறினான் என்பதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்” என்று கூறினர். அப்போது “என்னை நம்பக் கூடியவர்களும் (என்னை) மறுக்கக் கூடியவர்களுமாக என் அடியார்கள் (இரு பிரிவினராக) உள்ளனர். “அல்லாஹ்வின் தயவாலும் அவன் கருணையாலும்தான் நமக்கு மழை பொழிந்தது’ எனக் கூறியவர்களோ என்னை நம்பி, நட்சத்திரத்தை மறுத்தவர்களாவர். இன்ன இன்ன நட்சத்திரத்தால்தான் (எங்களுக்கு மழை பொழிந்தது) எனக் கூறியவர்களோ என்னை மறுத்து, நட்சத்திரத்தை நம்பியவர்களாவர்’ என இறைவன் கூறினான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி (1038)

இந்த ஹதீஸில் நட்சத்திரத்தில் நம்பிக்கை வைக்கக் கூடாது என்று சொல்லப்படுகின்றது. நட்சத்திரம் ஒன்று உள்ளது என்று நம்பினால் அது தவறல்ல. அதை இந்த நபிமொழி மறுக்கவில்லை. மாறாக நட்சத்திரத்தால் மழை பெய்யும் என்றும் எதிர்கால விசயங்களை அதன் மூலம் கணிக்க முடியும். அதனால் மற்றவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்றும் நம்புவதை இந்த ஹதீஸ் மறுக்கின்றது.

யாராவது இந்த அடிப்படையில் நட்சத்திரத்தை நம்பினால் அவன் அல்லாஹ்வை நம்பவில்லை. நட்சத்திரத்தையே ஈமான் கொண்டுள்ளான்.

இது போல் சூனியத்தை நம்பினால் சொர்க்கம் செல்ல முடியாது. சூனியத்தால் தாக்கம் ஏற்படும் என்று சொல்பவர்களுக்கு மரண அடியாக இந்த ஹதீஸ் உள்ளது.

சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்று நம்புபவன் சொர்க்கம் செல்ல மாட்டான் என்று இந்த வாசகம் மற்ற குர்ஆன் வசனங்களுக்கு ஏற்ப மிகத் தெளிவாக அமைந்திருக்கின்றது.

FacebookGoogle+TwittertumblrLinkedInEmail