சூனியத்தை நம்பியவன் (مُؤْمِنٌ بِسِحْر) சுவனம் நுழைய மாட்டான் என்கிற செய்தி “அஹ்மத்” கிதாபில் இல்லையா?

14424076_548969688629466_1892866264_o

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

விதியை மறுப்பவன், நிரந்தரமாக மது அருந்துபவன், சூனியத்தை உண்மை என்று நம்புபவன், (பெற்றோருக்கு) மாறு செய்பவன் ஆகியோர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்.

அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி)

நூல் : அஹ்மது (26212)

சூனியத்தை ஒருவன் நம்பினால் அவன் சொர்க்கம் செல்ல மாட்டான் என்பதைத் தெளிவான முறையில் இந்த நபிமொழி சொல்கிறது. எந்த வியாக்கியானமும் கொடுக்க முடியாத வகையில் இதன் வாசக அமைப்பு அமைந்துள்ளது.

இந்த ஹதீஸ் வேறு சில வழிகளில் வருகின்றது. அந்தச் செய்திகளெல்லாம் பலவீனமானவை. ஆனால் முஸ்னத் அஹ்மதில் (26212) பதிவு செய்யப்பட்ட மேற்கண்ட ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது.

முஸ்னத் அஹ்மதில் இப்படி ஒரு ஹதீஸ் இருந்தும் சிலர் முஸ்னத் அஹ்மதில் இப்படி ஒரு ஹதீஸ் மூலப்பிரதியில் இருக்கவில்லை. பிற்காலத்தில் சாப்ட்வேர் காப்பியில் இது இடைச்செருகலாகச் சேர்க்கப்பட்டது என்று கூறி இதை மறுக்க்கப்பார்க்கின்றனர். முஸ்னத் அஹ்மதின் எந்த அச்சுப்பிரதியிலும் இந்த ஹதீஸ் இல்லை என்றும் கூறுகின்றனர்.

குறித்த செய்தி பற்றிய தெளிவான விளக்கம் அடங்கிய வீடியோ பதிவை பார்வையிடுங்கள்

FacebookGoogle+TwittertumblrLinkedInEmail