சூனிய பாதிப்பு வரும், ஆனால் வராது – சூனியம் பற்றிய சவூதி அரசின் நிலைபாடு ஓர் அலசல்

12957171_1343733538977107_763137254_n

சூனிய பாதிப்பு வரும் ஆனால் வராது என்பது போல் தலைப்பு அமைந்துள்ளதில் ஆச்சரியப்பட வேண்டாம். சூனியம் குறித்த சவூதி அரசின் செயல்பாடுகளும் கொள்கை முடிவும் இப்படித்தான் உள்ளது.

அதன் விபரம் இதுதான்.

இது சவூதியில் இருந்து வெளியாகும் அல் யவ்ம் என்ற நாளிதழில் வெளியான செய்தி.

لقتل عقوبة جرائم السحر والشعوذة أو السجن 15 عاما

السحر والشعوذة آفة خطيرة تهدد كيان المجتمع (اليوم)

فيصل الفريان ـ الدمام

انتهت الرئاسة العامة لهيئة الأمر بالمعروف والنهي عن المنكر مؤخرا من إعداد مشروع لائحة نظام مكافحة السحر والشعوذة بالتنسيق مع استشاري متخصص فيصياغة اللوائح والأنظمة، حيث تم استقصاء المخالفات والملاحظات من العاملين في الميدان ، واتضح أهمية مكافحة هذه الظاهرة الخطيرة لما لها من آثار سيئة علىالفرد والمجتمع وتم رفعها الى هيئة التحقيق والادعاء العام لتطبيقها،

و”اليوم” تنفرد بنشر أهم بنود لائحة مكافحة آفة السحر والشعوذة والعقوبات المقررة والتي تصل على من ثبت شرعا قيامه بارتكاب جريمة السحر بالقتل, واذا رأتالمحكمة المختصة – لأسباب تقدرها – عدم ايقاع عقوبة القتل فيعاقب بالسجن مدة لا تقل عن خمس عشرة سنة وبغرامة لا تقل عن ثلاثمائة الف ريال, ولا تزيد علىخمسمائة الف ريال.

நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதற்கான துறை சூனியம், சோதிடம், மாந்திரீகம், தாயத்து தகடு ஆகிய குற்றங்களைத் தடுப்பதற்காக அதற்கான தண்டனை பட்டியலைத் தயாரித்துள்ளது.

இதன் மூலம் தனி நபரையும் இந்தக் குற்றங்களில் மூலம் விளைகின்ற அபாயகரமான விளைவுகளிலிருந்து காப்பாற்ற முடியும்.

சூனியம் செய்தவருக்கு மரண தண்டனை!

இதற்குரிய நீதிமன்றம் மரண தண்டனை தேவையில்லை என்று கருதினால் 15 வருடங்களுக்குக் குறையாமல் சிறைத் தண்டணையும், மூன்று இலட்ச ரியால்களுக்குக் குறையாமலும் 5 லட்ச ரியால்களை விட அதிகமாகாமலும் அபராதத் தொகை விதிக்கப்படும் என்று சவூதி அரசு சட்டம் இயற்றியுள்ளது.

இது தவிர சோதிடம், தாயத்து, தகடு உள்ளிட்ட செயல்களும் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குற்றத்துக்கும் உரிய தண்டனைகளும் இச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

சூனியத்துக்கு மரண தண்டனையும் அதற்கு அடுத்த நிலையில் உள்ள தண்டனையும் அளிக்கும் சட்டம் வரவேற்கத்தக்கது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால் இச்சட்டத்தில் சூனியத்துக்கு அளித்துள்ள விளக்கம் தான் விநோதமாக உள்ளது.

السحر: عقد ورقي وأدخنه وكلام يتكلم به او كتابة تكتب او عمل يعمل, بقصد التأثير في بدن المسحور او قلبه او عقله بمباشرة او غير مباشرة, وطرقه وانواعهقديمة ومتجددة ومنه ما هو تخييل وما هو حقيقة فمنه ما يقتل وما يمرض, ومنه ما يفرق بين المرء وزوجه وما يبغض احدهما

சூனியத்தின் விளக்கம்:

முடிச்சுப் போடுதல்; மந்திரித்தல்; புகை போடுதல்; சிஹ்ருக்குரிய வார்த்தைகளை மொழிதல், அல்லது எழுதுதல், அல்லது சிஹ்ர் வைக்கப்படுபவனின் உடலில், அல்லது உள்ளத்தில், அல்லது அறிவில் நேரடியாகவோ, அல்லது மறைமுகமகமாகவோ பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன் அதற்குரிய காரியத்தைச் செய்தல், இதனுடைய வழிமுறைகள் புதிதாகவோ பழையதாகவோ இருக்கலாம். அவற்றில் உண்மையானவையும் உண்டு. வெறும் மாயையும் உண்டு;

கொலையை ஏற்படுத்துபவையும் உண்டு; நோயை ஏற்படுத்துபவையும் உண்டு; கணவன் மனைவிக்கு மத்தியில் பிரிவினையையும் பகைமையை ஏற்படுத்துபவையும் உண்டு. மனிதனின் உடலில் மட்டும் இல்லாமல் மனதிலும், மூளையிலும் சூனியத்தின் மூலம் பாதிப்பு எற்படுத்த முடியும். சூனியம் செய்யப்படுபவனைத் தொடாமலும் தொட்டும் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்று சூனியம் பற்றி இச்சட்டத்தில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

சூனியத்துக்கு தரப்பட்ட விளக்கமும், அதற்கு தண்டனை வழங்கும் சட்டமும் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளது.

சூனியத்தின் மூலம் ஒருவனைக் கொல்ல முடியும்; சூனியத்தின் மூலம் நோயை ஏற்படுத்த முடியும்; கணவன் மனைவிக்கு இடையே பிரிக்க முடியும். மனிதனின் உடலில் மட்டும் இல்லாமல் மனதிலும், மூளையிலும் சூனியத்தின் மூலம் பாதிப்பு எற்படுத்த முடியும். சூனியம் செய்யப்படுபவனைத் தொடாமலும் தொட்டும் பாதிப்பை ஏற்படுத்த முடியும்

என்று இந்த விளக்கத்தை சவூதி அரசு நம்பினால் சூனியத்துக்கு எதிராக இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வந்திருக்காது.

சூனியக்காரன் சவூதி மன்னரை சூனியத்தால் சாகடித்து விட முடியும்; சவூதி போலீஸாருக்கும் சூனியத்தின் மூலம் பாதிப்பை ஏற்படுத்த முடியும்; நீதிபதியையே சூனியத்தின் மூலம் கிறுக்கனாக ஆக்க முடியும் என்று சவூதி அரசு நம்பினால் இப்படி ஒரு சட்டமே கொண்டு வந்திருக்க முடியாது.

சூனியக்காரனால் மெய்யாகவே இப்படிச் செய்ய முடியும் என்று சவூதி உலமாக்கள் கருதி இருந்தால் நமக்கு சூனியக்காரனால் ஏதும் ஆகி விடுமோ என்ற அச்சமே இப்படி சட்டம் போடுவதைத் தடுத்து விடும்.

மேலும் யாரையும் தொடாமலே சூனியத்தால் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்றால் உலகில் யாருக்கும் தெரியாத வகையில் சூனியக்காரன் எதையாவது செய்து நம்மைக் கொன்று விட்டால், நோயாளியாக்கி விட்டால் கிறுக்கனாக்கி விட்டால் நம் நிலை என்னாகும் என்று கருதுவது தான் மனிதனின் இயல்பு.

அப்படி இருந்தும் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது ஏன்? சூனியக்காரனால் ஒரு முடியைக் கூட பிடுங்க முடியாது என்று சவூதி உலமாக்கள் உள்ளூர நம்புகிறார்கள்; அங்குள்ள ஆட்சியாளர்கள் நம்புகிறார்கள். இதனால் தான் தைரியமாக இப்படி ஒரு சட்டத்தை இவர்களால் கொண்டு வர முடிந்துள்ளது.

சூனியத்துக்கு ஆற்றல் இல்லை என்று வெளிப்படையாகச் சொன்னால் மூட சுன்னத் ஜமாஅத்துக்காரன்கள் சவூதிக்கு எதிராக பிரச்சாரம் செய்வார்கள் என்ற அச்சத்தின் காரணமாகத் தான், “வரும், ஆனால் வராது” என்ற இந்தச் சட்டம்.

சூனியக்காரனால் கடுகளவும் எங்களுக்குத் தீங்கு செய்ய முடியாது என்று இச்சட்டத்தின் மூலம் சவூதி அரசு ஒப்புக் கொள்கிறது.

மெய்யாகவே ஒருவனுக்கு எங்கோ இருந்து கொண்டு நம்மைப் பாதிக்கச் செய்யும் ஆற்றல் இருந்தால் அதற்கு அஞ்சுவது தான் அறிவுடமை. எங்கோ இருந்து கொண்டு நம்மை ஓய்த்து விடும் ஆற்றல் சூனியக்காரனுக்கு இருப்பதாக நம்பினால் அவனால் பாதிப்பு ஏற்படாமல் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அவனுடன் மோதக் கூடாது.

அப்படி மோதவும், அவனைக் கொல்லவும் நாம் துணிந்தால் அவனுக்கு எந்த ஆற்றலும் இல்லை என்று நாம் நம்புகிறோம் என்பதுதான் பொருள்.

FacebookGoogle+TwittertumblrLinkedInEmail