பி.ஜெ யின் மரணத்தை எதிர்பார்க்கும் முஷ்ரிகீன்களுக்கு! – சத்தியம் ஜெயிக்கும் போது அசத்தியம் அடியோடு அழிவதை பார்ப்பீர்கள்

pjyin

“உமது வலது கையில் உள்ளதைப் போடுவீராக! அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி விடும். அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி. (போட்டிக்கு) வரும் போது சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான்” (என்றும் கூறினோம்.)

(திருக்குர்ஆன் 20:69)

சூனியத்தினால் எந்தவொரு பாதிப்பையும் யாராளும் நிகழ்த்த முடியாது என்றும் அனைத்தும் இறைவன் புறத்தினால் தான் ஏற்படுகின்றது என்பதும் மறுக்க முடியாத மறைக்க முடியாத ஓர் உண்மையாகும்.

உண்மை தெளிவாக உண்மையாக இருக்க, வாழ்கைச் செலவுக்கு பிழைப்புத் தேடி அலைபவர்களும், வாங்கும் பணத்திற்கு மேலதிகமாகவே ஜால்ரா அடிக்கும் அரபு நாட்டு ஏஜண்டுக்களுக்கும் மிகப் பெரிய இடியாக வயிற்றில் வீழ்ந்தது ஓர் அடி.

ஆம் “எனக்கு சூனியம் செய்து காட்டுங்கள் 50 இலட்சங்கள் பரிசாகத் தருகின்றேன்” என்று புனித மிக்க ரமழான் மாத தொடர் உரையில் பகிரங்க அறைகூவல் விடுத்தார் தென்னிந்திய மார்க்க அறிஞர் சகோதரர் பி.ஜெ அவர்கள்.

இறை சக்கியை மறுத்து, சில பொழுதுகளில் இறைவனையே மறுத்து சூனியத்தையும், சூனியக் காரர்களையும் நம்பி வாழ்வையும், மார்க்கத்தையும் தொலைத்தவர்களுக்கு இதுவொரு பேரிடி என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லாத வகையில் அவர்களின் செயல்பாடுகளை தற்போது அமைத்துள்ளார்கள்.

தமிழ் பேசும் இஸ்லாமிய அறிவியல் புரட்சி வரலாற்றில் இது போன்றதொரு சவாலை யாரும் விட்டதுமில்லை, நேருக்கு நேராக நின்று சவாலை முறியடிக்க வந்தவர்களுடன் போட்டியிட்டதுமில்லை என்பது வரலாறு.

என்னதான் கொள்கை உறுதி, கோட்பாடு என்று பலர் பேசினாலும் உயிரை பணயம் வைத்து சவாலை ஏற்றுக் கொள்வதென்ற விஷயத்தில் பலரும் பின்வாங்கி விடுவது உலக வரலாற்றில் சர்வ சாதாரணமாக நடைபெறும் ஒன்றாகும்.

ஆனால் அல்லாஹ் சகோதரர் பி.ஜெ அவர்களுக்கு அருள் புரிய வேண்டும். சவால் விட்டது மாத்திரமல்ல அதனை பகிரங்கமாக நிரூபணம் செய்வதற்கு வந்தவருடன் தனது உயிரை துச்சமென மதித்து ஏற்றுக் கொண்டுள்ளார்.

காரணம் உயிருக்கு உரிமை உடையவன் அல்லாஹ் மாத்திரம் தான் ஒரு சூனியக்காரனல்ல ஆயிரம் சூனியக்காரர்கள் ஒன்று சேர்ந்தாலும் பி.ஜெ மட்டுமல்ல தூய ஏகத்துவக் கொள்கைகை உண்மையாக நம்பி ஏற்றுக் கொண்ட ஒருவரைக் கூட எதுவும் செய்ய முடியாது என்பது இஸ்லாமிய வரலாறு.

மணிகண்டன் அகோரி அசத்தியத்தை சத்தியமென்று நம்பும் ஓர் அசத்தியவாதி

“தனக்கு சூனியம் செய்து காட்டுங்கள் ஐம்பது இலட்சம் பரிசாகத் தருகின்றேன்” என்று சகோதரர் பி.ஜெ அவர்கள் சவால் விட்டுப் பேசிய உரையின் பகுதி கடந்த ரமழான் மாதம் முழுவதும் தமிழகத்தின் “மெகா டிவி” யில் ஒளிபரப்பப் பட்டதுடன், தமிழகம் எங்கும் வால் “போஸ்டர்களும்” ஒட்டப்பட்டன.

விஸ்வரூபம் திரைப்படம் எடுக்கப்பட்ட நேரத்தில் விஸ்வரூபம் தமிழகத்தில் எங்கும் ஓடாதுஎன்று தவ்ஹீத் ஜமாத் சார்பாக ஒட்டப்பட்ட போஸ்டர் எப்படி கமல்ஹாசனின் தூக்கத்தை கெடுத்து தனது இஸ்லாமிய எதிர்ப்புப் பயணத்தை பின்வாங்க வைத்து பரபரப்பை உண்டாக்கியதோ, அதைவிட வேகமாக எனக்கு சூனியம் செய்து காட்டுங்கள்என்ற சகோதரர் பி.ஜெ யின் சவால் வாசகம் அடங்கிய போஸ்டர்கள் தமிழகத்தில் மட்டுமல்ல தமிழகத்தைத் தாண்டி தமிழ் மக்கள் வாழும் பல நாடுகளிலும் சமூக வலை தளங்கள் மூலமாக பரவிய வேகத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பல மதங்களையும் சேர்ந்த சூனியக் காரர்கள் ஆட்டம் கண்டார்கள், கூடவே இஸ்லாத்திற்குள் இருந்து கொண்டு சூனியத்தினால் பாதிப்பு ஏற்படும் என்று நம்பி இணைவைப்பாளர்களாகிப் போனவர்களும் ஆட்டம் கண்டார்கள்.

ஒவ்வொரு பகுதியிலும் சூனியத்தினால் மக்களை ஏமாற்றிப் பிழைத்த பலரும் சவாலைக் கண்டு சருகுகளாய் சாம்பலானார்கள்.

தற்போது மணிகண்டன் அகோரி என்ற சூனியக் காரன் தான் சூனியம் செய்து பாதிப்பை உண்டாக்கிக் காட்டுகின்றேன் என்று சவாலை ஏற்றுக் கொண்டு ஒப்பந்தம் செய்ய முன்வந்து இறுதியில் 48 நாட்களுக்குள் பி.ஜெ யின் கதையை முடிப்பதாக கூறிவிட்டு சென்றார் மணிகண்டன் அகோரி என்ற சூனியக் காரன்.

உண்மைக்கு என்றும் மரணமில்லை என்பது வரலாறு தந்த உண்மை. அந்த வகையில் காலா காலமாக மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்திய சாமியார்களுக்கும், இஸ்லாத்தின் பெயரால் மக்களை ஏமாற்றிய ஆலிம்சாக்களுக்கும், அரபு நாட்டு கைக் கூலிகளுக்கும் எதிர்வரும் 17.09.2014 வரை நேரம் இருக்கின்றது.

பி.ஜெ யின் இந்த சவால் சத்தியமா? சூனியமா? என்பதைத் தாண்டி, இந்து மதம் உண்மையானதா? இஸ்லாமிய மார்க்கம் உண்மையானதா? என்பதை மக்கள் நடைமுறையில் பார்ப்பதற்குறிய வாய்ப்புகளில் ஒன்றாக மாறிவிட்டது –  எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!

முடிந்தால் அவர்கள் தமது அசத்தியத்தை உண்மைப் படுத்த தம்மால் ஆன முயற்சிகளை செய்து கொள்ளட்டும். மறுமை நாள் வரை இவர்கள் அத்தனை பேரும் சேர்ந்து முயன்றாலும் அது அவர்களால் முடியாது என்பது அவர்களே உணர்ந்த உண்மை என்பது அவர்கள் அனைவருக்கும் தெரிந்ததாகும்.

பி.ஜெ யின் இந்த சவால் மார்க்க அடிப்படையில் அமைந்ததா?

பி.ஜெ அவர்களுக்கும் மணிகண்டன் அகோரி என்ற சூனியக் காரனுக்கும் இடையில் நடைபெற்ற இவ்வொப்பந்தம் மார்க்க அடிப்படையில் அமைந்ததா? இல்லையா? என்று கேள்வி கேட்ப்பவர்களுக்கு சகோதரர் பி.ஜெ அவர்கள் அளித்த பதில்களே போதுமான தெளிவானவைகளாகும்.

அவற்றைப் பார்க்க கீழுள்ள தலைப்புகளை க்லிக் செய்யுங்கள்.

பி.ஜெ யின் சூனிய சவால் விளம்பரம் தேடியதா?

சூனியம் என்ற பெயரில் பி.ஜெ பந்தையம் கட்டியது மார்க்க அடிப்படையில் சரியானதா?

ஐம்பது இலட்சத்தை பி.ஜெ யின் சொந்தப் பணத்தில் கொடுக்க வேண்டியது தானே?

இறைவன் நாடினால் சூனியம் பலிக்குமா?

சூனியம் ஒரு காலத்தில் இருந்து இப்போது இல்லாமலாகியிருக்கலாமே!

பி.ஜெ யின் மரணத்தை எதிர்பார்க்கும் முஷ்ரிகீன்களுக்கு!

சூனியத்தினால் பாதிப்பை உண்டாக்க முடியும், நினைத்தவரை நினைத்ததைப் போன்ற துண்பங்களை ஏற்படுத்த முடியும், அப்படி ஒரு கலை உண்டு, கத்தரிக்காய் உண்டு என்று நம்பி செய்திகளை பரப்பி வந்தவர்களுக்கும், பி.ஜெ செத்தால் போதும் என்று நப்பாசையில் நாக்கு வழித்தவர்களுக்கும் இதுவொரு சிறந்த சந்தர்ப்பமாக மாறிவிட்டதாக என்றி அட்ப சந்தோஷம் அடைந்து கொள்கின்றார்கள்.

மாத்திரமன்றி, இப்படி சவால் விடலாமா? இது சூது இல்லையா? பி.ஜெ தருவதாக சொன்ன ஐம்பது இலட்சங்கள் அவருடைய காசா அல்லது பிறருடைய காசா என்றெல்லாம் தங்களை அறிவாளிகள் என்று நினைத்துக் கொண்டு சில சக்கைகள் மொக்கை போட்டுக் கொண்டிருக்கின்றன.

“ஹதீஸை மறுக்கின்றார், முஃதஸிலாக்களின் கொள்கையை பறப்புகின்றார்“ என்றெல்லாம் திரைக் கதை வசனம் எழுதிய இலங்கை இந்திய தவ்ஹீத் பெயர் தாங்கிகளில் கூட இந்த வகையினர் இருப்பதை நினைத்து ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

எது எப்படியோ “இந்த ஆளு செத்துத் தொலைஞ்சா போதும்” என்ற ஏக்கப் பெருமூச்சு அல்லாஹ்வின் மீது கொண்ட நம்பிக்கையை விட சூனியத்தின் மீது கொண்ட அளவுக்கதிகமான நம்பிக்கையை படம் பிடித்துக் காட்டுக்கின்றது.

“பி.ஜெ என்ன 49 நாட்களுக்கு சாக மாட்டார் என்று நினைத்து விட்டாரா? இப்படி ஒப்பந்தம் போட்டதிலிருந்து அதைத் தானே சொல்ல வருகின்றார்” என்று நாக்கின் மீது பல்லுப் படாமல் பேசுபவர்கள் கொஞ்ச நேரம் செலவு செய்து நடந்த ஒப்பந்த வீடியோவை மீண்டும் ஒரு முறை போட்டுப் பார்த்தாலே பி.ஜெ செய்த ஒப்பந்தத்தில் மரணம் தொடர்பில் என்ன பேசப்பட்டது என்பது புரிந்து விடும்.

அதை விடுத்துவிட்டு சந்திக்கு சந்தி அமர்ந்து பழைய சுருட்டை புகைத்துக் கொண்டு பத்தி சாம்பலாகிய அரசியலை அலசும் பலசுகள் போல் மீண்டும் மீண்டும் ஒரே புராணத்தை பாடிக் கொண்டிருக்காமல் தாம் சொல்வது உண்மையென்றால் இந்த பெயர் தாங்கிகள் தமது கருத்தை நேருக்கு நேர் நிரூபிக்க முன்வர வேண்டும்.

உண்மையை உணர்ந்து சரியானதை ஏற்று சத்தியத்தின் பால் திரும்ப மறுக்கும் இவர்களின் உள்ளங்களுக்கு இறைவன் தான் நேர்வழியைக் காட்ட வேண்டும் என்று பிரார்த்திப்பதை விட வேறு எதுவும் நம்மால் செய்ய முடியாது.

நபியவர்களுக்கு மந்திக்க வந்தவர் இஸ்லாத்தை ஏற்றார்.

இஸ்லாமிய வரலாற்றில் யாரெல்லாம் மந்திரம், பேயோட்டுதல், சூனியம் என்று மக்களை ஏமாற்றினார்களோ அவர்கள் அனைவரும் முகவரி அற்றவர்களாக மாறிவிட்ட வரலாற்றை நாம் இன்றைக்கும் பார்க்க முடியும்.

இதோ நபியவர்களின் காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை பாருங்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அஸ்து ஷனூஆஎனும் குலத்தைச் சோர்ந்த ளிமாத் பின் ஸஅலபா என்பார் மக்காவுக்கு வந்தார். அவர் காற்றுகறுப்புக்காக ஓதிப்பார்ப்பவராய் இருந்தார். மக்காவைச் சேர்ந்த சில அறிவிலிகள் முஹம்மத் ஒரு மனநோயாளிஎன்று கூறுவதை அவர் செவியுற்றார். நான் அந்த மனிதரைச் சந்தித்(து ஓதிப்பார்த்)தால் எனது கரத்தால் அவருக்கு அல்லாஹ் நிவாரணம் அளிக்கக்கூடும்என்று ளிமாத் சொன்னார். அவ்வாறே அவர் முஹம்மத் (ஸல்) அவர்(களிடம் வந்து அவர்)களைச் சந்தித்தபோது, “முஹம்மதே! காற்றுகறுப்புக்காக நான் ஓதிப்பார்த்துவருகிறேன். எனது கரத்தால் தான் நாடியவர்களுக்கு அல்லாஹ் நிவாரணமளிக்கிறான். உங்களுக்கு நான் ஓதிப்பார்க்கட்டுமா?” என்று கேட்டார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனைத்துப் புகழும் அல்லாஹ் வுக்கே உரியது. நாங்கள் அவனைப் போற்றுகிறோம்; அவனிடமே உதவி கோருகிறோம். அல்லாஹ் யாரை நேர்வழியில் செலுத்திவிட்டானோ அவரை எவராலும் வழிகெடுக்க முடியாது. அவன் யாரை வழிகேட்டில் விட்டுவிட்டானோ அவரை எவராலும் நேர்வழியில் சேர்க்க முடியாது. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையேதுமில்லை என்றும், முஹம்மத் அல்லாஹ்வின் அடிமையும் தூதருமாவார் என்றும் நான் உறுதி கூறுகிறேன். இறைவாழ்த்துக்குப் பின்!என்று கூறினார்கள்.

(இதைக் கேட்ட) ளிமாத், “நீங்கள் (இப்போது) சொன்ன இந்த வார்த்தைகளை மீண்டும் சொல்லுங்கள்என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த வார்த்தைகளை முன்பு போன்றே மூன்று முறை கூறினார்கள். இதைக் கேட்ட ளிமாத், “நான் சோதிடர்கள், சூனியக்காரர்கள், கவிஞர்கள் ஆகியோரின் சொற்களைக் கேட்டிருக்கிறேன். ஆனால், நீங்கள் கூறிய இந்த வார்த்தைகளைப் போன்று நான் கேட்டதேயில்லை. இவ்வார்த்தைகள் ஆழ்கடலையே தொட்டுவிட்டன. உங்களது கரத்தை நீட்டுங்கள்; நான் இஸ்லாத்தை ஏற்பதற்கு உங்களிடம் உறுதிமொழி அளிக்கிறேன்என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவரிடம் உறுதிமொழி வாங்கிக்கொண்டார்கள். அப்போது உம்முடைய சமூக மக்களுக்காகவும் (அவர்கள் சார்பாக) உறுதிமொழி அளிப்பீராக!என்று கூறினார்கள். அதற்கு ளிமாத் என் சமூகத்தாருக்காகவும் (உறுதி அளிக்கிறேன்)என்று கூறினார்.

(முஸ்லிம் 1576)

உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழியக் கூடியதாகவே உள்ளது.

(அல்குர்ஆன் 17:81)

சத்தியம் ஜெயித்து அசத்தியம் அடியோடு சாயும் போது முஷ்ரிகீன்களின் முகத்திரை அகலக் கிழிவதை இவ்வுலகு பார்க்கத்தான் போகின்றது.

FacebookGoogle+TwittertumblrLinkedInEmail