சூனியம்.காம் ஏன்? எதற்கு?

aen copy

www.sooniyam.com என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இத்தளமானது சூனியம் மற்றும் கண்ணேறு பற்றி முஸ்லிம்களுக்கு மத்தியில் காணப்படும் போலி நம்பிக்கைகளை அடையாளப்படுத்தும் விதமாகவும், ஹதீஸ்கள் என்ற பெயரில் குர்ஆனின் தூய கருத்துக்கு மாற்றமாக உருவாக்கப்பட்டுள்ளவற்றை இனம் காட்டுவதற்காகவும் உருவாக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

அடங்கியுள்ள பகுதிகள்.

தளத்தின் பகுதிகள் கட்டுரைகள், பொய்யான ஹதீஸ்கள், ஆய்வுகள், உரைகள், நூல்கள், விமர்சனங்கள் போன்ற முக்கிய தலைப்புக்களாகவும், அவற்றின் ஒவ்வொரு பகுதியும் வாசகர்களின் வசதி கருதி தனித் தனி உட்பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

சூனியம் பற்றியோ அல்லது குர்ஆனிற்கு முரன்படும் ஹதீஸ்கள் பற்றியோ வாசகர்களுக்கு உள்ள சந்தேகங்களை இத்தளத்தில் பதியப்பட்டுள்ள ஆக்கங்களை வைத்து வாசகர்கள் தீர்த்துக் கொள்ள முடியும்.

கலந்துரையாடல் தளம்.

சூனியம்.காம் இணையதளத்தின் ஒரு பகுதியாக கலந்துரையாடல் தளம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகள் வாரியாக குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் ஒளியில் உங்கள் ஆய்வுகளையும், கருத்துக்களையும் நீங்கள் பதிய முடியும்.

FacebookGoogle+TwittertumblrLinkedInEmail