பொதுவானவை

உம்மு ஹராம் (ரலி) அவர்கள் விஷயத்தில் தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் சொன்னது தவறா? நஸ்ரி என்பவரின் காட்டுப் புலம்பலுக்கு பதில்!

23

நபிகள் நாயம் (ஸல்) அவர்கள், நபித்தோழியர் உம்மு ஹராம் (ரலி) என்ற அண்ணியப் பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவதாகவும், நபிகள் நாயகம் அவர்களுக்கு உம்மு ஹராம் (ரலி) அவர்கள் பேண் பார்த்து விடுவார்கள் என்றும் ஒரு செய்தி புகாரி முஸ்லிம் உள்ளிட்ட பல கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த செய்தி தொடர்பாக தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் சகோ. ரஸ்மின் MISc அவர்கள் பேசிய ஒரு வீடியோ க்லிப்பை கடந்த 30.07.2017 அன்று கொழும்பில் நடைபெற்ற ஒரு விவாதத்தில் ஸலபிகள் சார்பில் விவாதத்தித்த நஸ்ரி என்பவர் போட்டுக் காட்டி, புகாரியில் நீங்கள் சொல்வதை எடுத்துக் காட்டுங்கள் என்று சொல்லி புகாரி கிதாபை தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்களிடம் கொடுத்தார்.

தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்கள் உடனடியாக குறித்த விவாதத்திலேயே அந்த செய்தியை புகாரியில் இருந்து எடுத்துக் காட்டி விட்டார்கள். விவாதத்தில் மூக்குடைபட்டு கேவலப்பட்ட நஸ்ரி ஸலபி என்பவர் தனது பறக்கும் மானத்தை வாளியிலாவது அள்ளி வைத்துக் கொள்வதற்காக தற்போது ஒரு ஆக்கத்தை எழுதி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் புகாரியில் இடம் பெறும் செய்தியில் அண்ணியப் பெண் என்ற வார்த்தையை காட்ட முடியுமா? தவ்ஹீத் ஜமாஅத் தலைவருக்கு சவால் என்று குறிப்பிட்டுள்ளார்.

முதல் விஷயம்; குறித்த வீடியோவில் எந்த இடத்திலும் அண்ணியப் பெண் என்ற வார்த்தை ஹதீஸில் இருப்பதாக தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் சொல்ல வில்லை. மாறாக குறித்த சம்பவத்தின் கருத்து அதுதான் என்பதே வீடியோவின் சாராம்சம்.

திருமணம் முடிக்க அனுமதிக்கப்பட்ட எந்தப் பெண்ணை தொட்டாலும், பேண் பார்தாலும், அவர்களின் மடியில் தலை வைத்து தூங்கினாலும் தவறு தான். அது ஹராம் தான்.

நஸ்ரி ஸலபி என்வர் அவர் மனைவியின் அல்லது தாயின் மடியில் தூங்கினால் யாரும் குறை சொல்ல மாட்டார்கள்.

அதை விடுத்து, பக்கத்து வீட்டு பெண்ணின் மடியில் தூங்கினால் தான் பிரச்சினை.

நஸ்ரி ஸலபி அவர்களே! பக்கத்து வீட்டுப் பெண் அண்ணியப் பெண் தானே அவள் மடியில் நீங்கள் படுத்துத் தூங்கலாமா? என்று ஒருவர் கேள்வி கேட்டால், பக்கத்து வீட்டுப் பெண் அண்ணிப் பெண் என்று எழுத்தில் காட்ட முடியுமா? என்று நஸ்ரி கேட்டால் அவரை அறிவாளி என்று யாராவது சொல்வார்களா? அல்லது வடிகட்டிய முட்டால் என்று சொல்வார்களா?

உனக்கு அனுமதியில்லாத எந்தப் பெண்ணையும் தொடக் கூடாது என்பது பொதுவான மார்க்க விதியாக இருக்கும் போது, ஹதீஸில் வார்த்தை உண்டா? என்று கேள்வி கேட்ப்பது எந்த வகை அறிவாளித்தனம்?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களின் வீட்டுக்கு சென்றார்கள், உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபியவர்களுக்கு பேன் பார்த்து விட்டார்கள் என்றெல்லாம் புகாரியில் இடம் பெரும் செய்தி நபியவர்களின் கண்ணியத்தையும், ஒழுக்கத்தையும் சீர்குழைக்கும் செய்தியாகும்.

ஒழுக்கத்தின் முன்மாதிரி நபிகள் நாயகம் அவர்களை ஒழுக்கம் இல்லாதவர்களாக சித்தரிக்க முயலும் குறித்த செய்தி நபியவர்களின் காலத்தில் நடைபெறவில்லை. அது புனித குர்ஆன் நபியவர்களை பற்றி சொல்லும் செய்திகளுக்கு மாற்றமானது என்று தவ்ஹீத் ஜமாஅத் பிரச்சாரம் செய்து வருகிறது.
குறித்த செய்தியை உண்மையானது என்று நிரூபிக்க துப்பில்லாத ஸலபிக் கும்பல் மேற்கண்டவாறு புலம்பி திரிகிறது.

உண்மையில் நஸ்ரி மட்டுமல்ல, முழு ஸலபிக் கும்பலுக்கும் முடியுமென்றால் உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபியவர்களின் பால் குடி அண்ணை அல்லது திருமணம் முடிக்க தடுக்கப்பட்ட உறவு, அண்ணியப் பெண் அல்ல என்னதை ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா? அதற்கு அறிவிருக்கிறதா? மறுமை நாள் வரை இவர்களினால் அதனை நிரூபிக்க முடியாது.

காரணம் உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபியவர்களின் பால் குடி அண்ணை என்றோ திருமணம் செய்ய தடுக்கப்பட்ட உறவு என்றொ எந்தவொரு ஆதாரத்தையும் எங்கும் காண முடியவில்லை. அப்படியிருந்திருந்தால் நாமே குறித்த செய்தியை ஆதாரபூர்வமானது உண்மையானது என்று ஏற்றுக் கொண்டிருப்போம்.

உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபியவர்களுக்கு அண்ணியப் பெண் என்பதினால் தான். நபியவர்கள் அவர்களின் மடியில் தூங்கியிருக்க மாட்டார்கள். உம்மு ஹராம் அவர்களும் நபியவர்களின் தலையை தொட்டு பேண் பார்த்திருக்க மாட்டார்கள்.

தனித்திருக்க வில்லை. இது இட்டுக்கட்டப் பட்ட செய்தி. புகாரி போன்ற அறிஞர்கள் அறியாமல் பதிவு செய்து விட்டார்கள். அறிஞர்கள் செய்த பிழையினால் நபியவர்கள் பிழை செய்ததாக எண்ணி விடக் கூடாது. அது ஹதீஸே அல்ல கட்டுக் கதை என்று தவ்ஹீத் ஜமாஅத் சொல்லி வருகிறது.

ஆகவே, நஸ்ரி மட்டுமல்ல, முழு ஸலபிக் கும்பலுக்கும் முடியுமென்றால் உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபியவர்களின் பால் குடி அண்ணை அல்லது திருமணம் முடிக்க தடுக்கப்பட்ட உறவு, அண்ணியப் பெண் அல்ல என்னதை ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா? அதற்கு அறிவிருக்கிறதா? என்று பார்ப்போம்.

உம்மு ஹராம் (ரலி) அவர்கள், நபியவர்களின் பால் குடி அண்ணையோ, திருமணம் செய்த தடுக்கப்பட்ட உறவோ அல்ல, அவர்கள் அண்ணியப் பெண்தான் என்பதுடன், நபியவர்களையும் உம்மு ஹராம் (ரலி) யும் தொடர்பு படுத்தி வரும் செய்தி பொய்யானது, இட்டுக்கட்டப்பட்டது என்பதை விரிவாக படிக்க கீழுள்ள லிங்கை பார்வையிடவும்.

http://www.sooniyam.com/?p=262

வீடியோவாக பார்க்க…

https://www.youtube.com/watch?v=KqudSORLxGE

https://www.youtube.com/watch?v=WHr_NNYKNtw

பி.ஜெ யின் மரணத்தை எதிர்பார்க்கும் முஷ்ரிகீன்களுக்கு! – சத்தியம் ஜெயிக்கும் போது அசத்தியம் அடியோடு அழிவதை பார்ப்பீர்கள்

pjyin

“உமது வலது கையில் உள்ளதைப் போடுவீராக! அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி விடும். அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி. (போட்டிக்கு) வரும் போது சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான்” (என்றும் கூறினோம்.)

(திருக்குர்ஆன் 20:69) Read more

அஹ்லுல் குர்ஆன் ஏன் தோன்றினார்கள்?

ahlussunnah

குர்ஆன் மற்றும் நபிகளாரின் வழிகாட்டுதல் ஆகிய இரண்டும் பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்பதிலும் இரண்டும் மார்க்க ஆதாரம் என்பதிலும் நமக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.

ஆனால் இரண்டும் பாதுகாக்கப்பட்ட விதத்தில் பல வித்தியாசங்கள் உள்ளன. இந்த வித்தியாசங்களைக் கூறுவதால் ஹதீஸ்களைப் பின்தள்ளுகிறோம் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. குர்ஆனா ஹதீஸா என்று வரும் போது இரண்டில் எதை எடுப்பது என்ற கேள்விக்கான பதிலாகத் தான் இந்த வித்தியாசங்களைக் கூறுகிறோம்.

1.             குர்ஆன் பல்லாயிரக்கணக்கான நபித்தோழர்களின் அங்கீகாரத்துடன் நமக்குக் கிடைத்திருக்கிறது. ஆனால் பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸ்கள் அனைத்தும் அனைத்து நபித்தோழர்களின் அங்கீகாரத்தைப் பெறவில்லை.

2.             நபி (ஸல்) அவர்களின் காலத்திலே குர்ஆனைப் பாதுகாக்கும் பணி தொடங்கப்பட்டு குழப்பங்கள் பரவுவதற்கு முன்பே உஸ்மான் (ரலி) அவர்களின் காலத்தில் நிறைவுக்கு வந்தது. நபி (ஸல்) அவர்கள் இறந்து கிட்டத்தட்ட 200 வருடங்கள் ஆன பிறகு நபி (ஸல்) அவர்களின் பெயரால் இட்டுக்கட்டுவது அதிகரித்த காலத்தில் ஹதீஸைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக இமாம்கள் ஹதீஸைத் தொகுக்கும் முயற்சியை முடுக்கி விட்டார்கள். பெரும்பாலான அறிஞர்கள் அறிவிப்பாளர் தொடர்களை ஆராய்ந்து பார்த்த அளவிற்கு செய்திகளை ஆராயவில்லை.

3.             குர்ஆனும் ஹதீஸும் ஒன்றுடன் ஒன்று கலந்து விடக் கூடாது என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் ஹதீஸை எழுதி வைப்பதை ஆரம்பத்தில் தடை செய்தார்கள். முதலில் குர்ஆனைப் பாதுகாப்பதற்காக குர்ஆனை மட்டும் எழுதி வைக்கச் சொன்னார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஒவ்வொரு ரமலானிலும் இறங்கிய குர்ஆன் வசனங்களை நபி (ஸல்) அவர்களுக்கு ஓதிக்காட்டுவார். குர்ஆன் தூய வடிவில் முழு பாதுகாப்புடன் விளங்க வேண்டும் என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது இரு முறை குர்ஆன் முழுவதையும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு ஓதிக் காட்டினார்கள். இது போன்ற சிறப்புக் கவனம் ஹதீஸ்களுக்குக் கொடுக்கப்படவில்லை.

4.             நபி (ஸல்) அவர்களின் காலத்திலிருந்தே ஒலி வடிவில் பல உள்ளங்களில் குர்ஆன் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் குர்ஆன் பதிவுசெய்யப்பட்டதைப் போல் பல உள்ளங்களில் ஹதீஸ் பதிவு செய்யப்படவில்லை.

5.             குர்ஆன் ஒட்டுமொத்த சமுதாயத்தின் கவனத்திற்கும் காலங்காலமாக கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் ஹதீஸ் இவ்வாறு அனைவருடைய கவனத்திற்கும் கொண்டு வரப்படவில்லை.

இது போன்ற வித்தியாசங்களைக் கவனிக்கும் போது பாதுகாக்கப்பட்ட விதத்தில் ஹதீஸை விட குர்ஆன் வலிமை வாய்ந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த வித்தியாசங்களினால் தான் பல அறிஞர்கள் குர்ஆனிற்கு கதயீ என்றும் ஹதீஸிற்கு லன்னீ என்று பிரித்துக் கூறியுள்ளார்கள். கதயீ என்றால் அதில் ஒரு போதும் எப்போதும் எந்த விதமான தவறுகளும் வராது என்று பொருள். லன்னீ என்றால் அதில் தவறு வருவதற்கு வாய்ப்புள்ளது என்று பொருள்.

இதை மையமாக வைத்து குர்ஆனுடன் ஹதீஸ் முரண்பட்டால் ஹதீஸை அறிவித்தவர்களிடத்தில் தவறு வர வாய்ப்பு உள்ளது என்ற அடிப்படையில் ஹதீஸை அறிஞர்கள் ஏற்க மாட்டார்கள். குர்ஆனுடன் ஹதீஸ் முரண்படும் போது ஹதீஸை வைத்து குர்ஆனுடைய சட்டத்தையும் மாற்ற மாட்டார்கள். ஹதீஸை விட குர்ஆன் வலிமையானது என்பதே இதற்குக் காரணம்.

நம்பகமான அறிவிப்பாளர்கள் அறிவிக்கும் செய்திகளில் ஒன்று இன்னொன்றுக்கு முரண்படுவதுண்டு. முரண்படும் செய்திகள் அனைத்தும் ஒன்றை விட இன்னொன்றுக்கு முன்னுரிமை கொடுக்க முடியாத விதத்தில் எல்லாம் ஒரே தரத்தில் அமைவதோடு அவைகளை இணைத்து எந்த விளக்கமும் கொடுக்க முடியவில்லையென்றால் இப்போது அறிஞர்கள் இந்த ஹதீஸ்களில் எதையும் ஏற்க மாட்டார்கள். இந்த வகைக்கு முள்தரப் (குளறுபடியுள்ளது) என்று பெயர் வைத்துள்ளார்கள்.

இரண்டு நம்பகமானவர்கள் அறிவிக்கும் செய்தி முரண்படும் போது இருவரில் யார் வலிமை மிக்கவர் என்று பார்ப்பார்கள். இருவரும் நல்லவர்கள் வல்லவர்கள் என்றாலும் முரண்பாடு வரும் போது இருவரில் அதிக வலிமையானவர் அறிவிக்கும் செய்திக்கு முன்னுரிமை கொடுத்து அவரை விட வலிமை குறைந்தவர் அறிவிக்கும் அந்தச் செய்தியை பின்தள்ளி விடுவார்கள்.

ஏற்றுக் கொள்ளப்பட்ட செய்திக்கு மஹ்ஃபூள் என்றும் பின்தள்ளப்பட்ட செய்திக்கு ஷாத் என்றும் கூறுவார்கள். இதனால் யாருடைய செய்தி பின்தள்ளப் பட்டதோ அவர் அறிவிக்கும் எந்தச் செய்தியையும் ஏற்கக் கூடாது என்ற முடிவுக்கு வர மாட்டார்கள். மாறாக முரண்பாடாக அறிவிக்கும் அந்தச் செய்தியை மாத்திரம் புறக்கணிப்பார்கள். இவ்விதி நம்மை விமர்சிப்பவர்கள் ஒத்துக்கொண்ட விதி தான். ஹதீஸ் கலையில் எழுதப்பட்டது தான்.

நம்பகமானவர்கள் முரண்பாடாக அறிவிக்க மாட்டார்கள் என்று நம்மை விமர்சிப்பவர்கள் கருதுவதால் தான் நம்பகமானவர்கள் அறிவிக்கும் செய்தி குர்ஆனுடன் முரண்படாது என்று கூறுகிறார்கள். நம்பகமானவர்களிடத்தில் முரண்பாடு வராது என்பேத இவர்களின் இந்த வாதத்திற்குக் காரணம்.

ஒரு நம்பகமானவர் தன்னைப் போன்ற இன்னொரு நம்பகமானவருக்கோ அல்லது தன்னை விட உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவருக்கோ முரண்பாடாக அறிவிப்பார்கள். அப்படி அறிவித்தால் என்ன முடிவு செய்ய வேண்டும் என்று மேற்கண்ட ஹதீஸ் கலையின் விதி உணர்த்துகிறது. அப்படியானால் குர்ஆனிற்கு முரண்பாடாக அவரது செய்தி அமையாது என்று எப்படி அறுதியிட்டுச் சொல்ல முடியும்? முரண்பாடாக இவரது செய்தி இருப்பதால் இவர் அறிவிக்கும் செய்தியை விட வலிமையான குர்ஆனிற்கு ஏன் முக்கியத்துவம் தரக்கூடாது?

சுருங்கச் சொல்வதாக இருந்தால் ஒரு ஹதீஸ் இன்னொரு ஹதீஸிற்கு முரண்படும். ஆனால் ஹதீஸ் குர்ஆனிற்கு ஒரு போதும் முரண்படாது என்று கூற வருகிறார்கள். இது எந்த விதத்தில் நியாயமானது?

ஹதீஸைப் பாதுகாக்கிறோம் என்று கூறிக் கொண்டு குர்ஆனிற்குக் கொடுக்க வேண்டிய மதிப்பைக் கொடுக்க மறுக்கிறார்கள். தங்களை அறியாமல் ஹதீஸை ஏற்றுக்கொண்டு குர்ஆனை மறுத்துக் கொண்டு இருக்கிறார்கள். குர்ஆனுடன் மோதும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் அமைந்த இந்தச் செய்திகள் தான் ஒருவனை குர்ஆன் மட்டும் போதும் என்று சொல்லும் நிலைக்குத் தள்ளுகிறது.

முரண்படும் இந்தச் சில செய்திகள் ஒட்டுமொத்த ஹதீஸையும் அவன் மறுப்பதற்குக் காரணமாக அமைந்து விடுகிறது. ஆனால் முரண்படும் அந்த செய்திகள் ஹதீஸ் கலையில் உள்ள விதியின் பிரகாரம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னது கிடையாது என்று கூறி நபியின் சொல்லுக்கு ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தியிருந்தால் அவன் ஒரு போதும் ஹதீஸ் வேண்டாம் என்று கூறவே மாட்டான்.

இனியும் இவர்கள் குர்ஆனிற்கு ஹதீஸ் எதுவும் முரண்படாது என்று வார்த்தை ஜாலம் காட்டி முரண்பட்ட தகவல்களைச் சொல்லுவார்களேயானால் இவர்களின் இந்த நடவடிக்கை தான் குர்ஆன் மட்டும் போதும் என்று சொல்பவர்கள் உருவாகுவதற்குக் காரணமாக அமையும். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.

சிந்தனைக்கு எட்டாத மோசமான செய்திகளை நபி (ஸல்) அவர்களின் பெயரால் சொன்னால் கேட்பவர் நபி (ஸல்) அவர்களைத் தவறாக மதிப்பிடுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இதனால் தான் சில நபித்தோழர்கள் இது போன்ற செய்திகளைக் கூற வேண்டாம் என்று எச்சரித்திருக்கிறார்கள்.

அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது : மக்களிடம் அவர்கள் புரிந்து கொள்பவற்றையே பேசுங்கள். (அவர்களுக்குப் புரியாதவற்றைப் பற்றி பேசி அதனால்) அல்லாஹ்வும் அவன் தூதரும் (அவர்களால்) பொய்யர்களென்று கருதப்படுவதை நீங்கள் விரும்புகிறீர்களா என்ன?

நூல் : புகாரி (127)

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது நீங்கள் ஒரு சமூகத்தாரிடம் அவர்களது அறிவுக்கு எட்டாத ஒரு விஷயத்தை அறிவிப்பது அவர்களில் சிலரையேனும் குழப்பத்தில் ஆழ்த்தாமல் விடுவதில்லை.

நூல் : முஸ்லிம் (12)